டயர்(Tyre) பராமரிப்புக்கு சில எளிய வழிமுறைகள்..!!

Default Image

டயர்(Tyre) வாகனங்களின் மிக இன்றியமையாத பகுதியாகும். டயர் பராமரிப்பு எப்படி, டயரில் சரியான காற்றழுத்ததை பராமரிப்பது எவ்வாறு, டயரில் பதியும் கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை சோதனை செய்வது எவ்வாறு என்றும் டயர் பற்றி மேலும் பல தகவல்களை காண்போம்.

 டயர் சோதனை
டயர் சோதனை செய்வது மிக அவசியம். தினமும் 10 நிமிடம் ஒதுக்கி டயரினை சோதியுங்கள். டயரில் தேவையற்ற பொருட்கள் தங்குவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கற்கள் போன்றவற்றை நீக்கமால் இருந்தால் டயரின் ஆயுட்காலம் பாதிக்கப்படும்.
டயரின் திரெட்களில் கற்கள் தங்க வாய்ப்புள்ளது. இதனை கண்டறிய  நானையத்தை பயன்படுத்துங்கள். டயரின் திரெட்களில் நானையத்தை கொண்டு சோதிக்கும் பொழுது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவற்றில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டால் அந்த இடத்தினை சோதியுங்கள்.
 வீல் அலைன்மென்ட்
வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் விவரங்களை தொடர்ந்து பராமரித்தல் அவசியம். வீல் அலைன்மென்ட் இயல்பாகவே மாறக்கூடியதாகும். சாலைகளில் பயணிக்கும் பொழுது பள்ளங்கள், மேடுகள் என சாலையின் சூழ்நிலைகளுக்கேற்ப டயர் இயங்குவதால் வீல் அலைன்மென்ட் மாறிகொண்டே இருக்கும்.
டயரின் முக்கிய அம்சமான கேஸ்டர் மற்றும் கேம்பர் சரியான விகிதத்தில் பராமரிப்பு அவசியம். முறையான அலைன்மென்ட மற்றும் பேலன்ஸ் இல்லாமல் இருந்தால் டயரில் முறையான தேய்மானம் இருக்காது. இதனால் சஸ்பென்ஷன் அமைப்பு பாதிக்கும்.
 டயர் இடமாற்றுதல்
டயரினை இடம் மாற்றி போடும்பொழுது மெக்கானிக்கின் பரிந்துரையை பின்பற்றுங்கள். முறையான தேய்மானம் முன்பற டயர்களில் ஏற்படுவது சற்று சிரமம்தான் அதற்க்கு காரணம் முன்புற டயர்களின் அதிக அழுத்தம்தான்.
முன்புற இடது டயரை பின்புற வலது டயருக்கு மாற்றுங்கள். உதவி டயர்கள் இல்லாத பட்சத்தில் நேராகவே மாற்றிக்கொள்ளுங்கள். உதவி டயர் இருக்கும்பட்சத்தில் கடிகார திசைப்படி டயரினை மாற்றுங்கள். இதனால் 5 டயர்களும் முறையான தேய்மானத்தை அடையும்.
 புதிய டயர் வாங்குமுன்
தேய்மான அடைந்த டயர்களை மாற்றிவிடுங்கள். மேலும் புதிய டயர் வாங்கும்பொழுது விலை குறைவானதா இருந்தாலும் தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை வாங்குங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்