தமிழகத்தில் உள்ள சென்னையை தலைமை இடமாக வைத்து கொண்டு இயங்கி வரும் நிறுவனம் டிவிஎஸ்.நிறுவனத்தின் பைக்குகள் அனைத்தும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
அப்படி வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பைக் தான் டிவிஎஸ் ரேடான். டிவிஎஸ் ரேடான் மோட்டார் பைக் 109 CC, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.2 PHP பவரையும், 8.7 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது .
இந்த மோட்டார் பைக்கில் இரண்டு வில்களிலும் ட்ரம் பிரேக்குகள் உள்ளது . மேலும் 18 இன்ச் அலாய் வீல்களை அமைக்கப்பட்டுள்ளது.இந்த மாடல் பைக்கில் டியூப்லெஸ் டயர்கள் உள்ளது.
விற்பனையில் சிறந்து விளங்கும் இந்த ரேடான் பைக் 8 மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் ஆனது . அறிமுகம் செய்த போது கருப்பு, வெள்ளை, கோல்டு மற்றும் பர்ப்பிள் ஆகிய 4 கலர்களில் பைக்குகளை வெளியிட்டனர் .
ஆனால் தற்போது டிவிஎஸ் நிறுவனம் 110 சிசி ரேடானில் 2 புதிய கலர்களை அறிமுகம் செய்துள்ளது. டிவிஎஸ் ரேடான் பைக்குகள் சிகப்பு மற்றும் க்ரே ஆகிய இரு கலர்களில் கிடைக்கும்.
ஆனால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே 50,070 ரூபாய் என்ற விலையில் டிவிஎஸ் ரேடான் கிடைக்கும்.தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து டீலர் ஷிப்களிலும் இந்த புதிய கலர் கொண்ட டிவிஎஸ் ரேடான் பைக்குகள் கிடைக்கும்.
மேலும் டிவிஎஸ் நிறுவனம் 1 லட்சத்திற்கும் மேலான ரேடான் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.இந்த ரேடான் பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 70 கிலோ மீட்டர் மைலேஜை தருகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…