உச்சகட்ட பாதுகாப்பு… அதிநவீன பிரேக்கிங்… கம்பீரமாய் களமிறங்கிய TVS Apache RTR 160 4V.!

TVS Apache 160 RTR 4V

இருசக்கர வாகன விற்பனையின் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது TVS நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யபப்படும் உயர்தர வாகனம் என்றால் அது TVS அப்பாச்சி தான்.  அதனால் TVS அப்பாச்சி பைக்கை அவ்வப்போது புத்துருவாக்கம் செய்து அறிமுகம் செய்து வருகிறது TVS நிறுவனம்.

வெகு நாட்களாக அப்பாச்சி பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த டூயல் சானல் ABS பிரேக்கிங் சிஸ்டம் தற்போது புதிய அப்பாச்சி 160 4V  (TVS Apache RTR 160 4V) பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இதன் போட்டியாளராக உள்ள பல்சர் NS 160க்கு இது கடும் சவாலானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

அறிமுகமானது நீருக்கடியில் செல்லும் FIFISH E-GO ரோபோ ட்ரோன்.!

புதிய வசதிகள் : 

TVS Apache RTR 160 4V–இல் டூயல் சானல் ABS பிரேக்கிங் வசதி மூலம் குறிப்பிட்ட வேகத்தில் பிரேக் அழுத்தும் போது கூட பைக் சாலையில் வழுக்கி கொண்டு செல்வது தவிர்க்கப்படும்.  இதன் காரணமாக வண்டியின் பழைய விலையில் இருந்து 2,800 ரூபாய் அதிகமாக்கப்பட்டுள்ளது.  மேலும், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் திறன் : 

ஆயில் கூல் 159.7 சிசி  எஞ்சின் மூலம் 17.55 பிஎஸ் பவர் வெளியாகிறது. 14.73NM டார்க் திறன் வெளியாகிறது. 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் இதில் உள்ளது. வாகனத்தை ஸ்போர்ட்ஸ், அர்பன், மழை என மூன்று வித மூட்களில் இயக்க முடியும்.

பாதுகாப்பு : 

முன்னரே சொன்னது போல டூயல் சானல் ABS பிரேக்கிங் வசதி உள்ளது.  பின்புறம் டிரம் பிரேக் வசதி உள்ளது. அதனை வேண்டுமென்றால் மாற்றி 240மிமீ டிஸ்க் பிரேக்காக பொருத்தி கொள்ளலாம்.  டியூப்லெஸ் டயர், அலாய் வீல், முன்புறம் டெலஸ்கோப் ஃபோர்க், பின்புறம்  மோனோ ஷார்க் ஃபோர்க் வசதி உள்ளது.

விலை : 

இதன் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூ.1.34 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த புதுப்பிக்கப்பட்ட TVS Apache RTR 160 4V கோவாவில் மோட்டோசோல் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் தேதியை நிறுவனம் அறிவிக்கவில்லை.

இந்த மாடலானது பல்சர் NS 160, ஜிக்ஸர் , யமஹா FZ V4, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ஆகிய பைக்குகளுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்