டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக், கடந்த மாதம் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் விற்பனையை முந்தி அசத்தி இருக்கிறது. ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் பைக்குகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் கேடிஎம் பைக்குகள் சிறப்பான தேர்வாக இருந்து வருகின்றன.
அதேநேரத்தில், கடந்த மாதத்தில் 983 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வலிமையான சர்வீஸ் நெட்வொர்க்கை கேடிஎம் பெற்றிருந்த போதிலும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் இளைஞர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.
இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள், மிச்செலின் டயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கில் நீளவாக்கிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2.23 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. தொடர்ந்து கேடிஎம் 390 பைக்குகளைவிட குறைவான விலை மாடலாகவே இருப்பதும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…