பாதுகாப்பு குளறுபடி… தாய்லாந்து நிறுவனம் தான் காரணம்.! பைக்குகளை திரும்ப பெரும் Triumph.!
Triumph : உயர் ரக ஸ்போர்ட்ஸ் பைக்காக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ட்ரம்ப் (Triumph) ரக பைக்குகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடல்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருபப்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் தயாரிக்கப்பட்ட ட்ரம்ப் (Triumph) ரக பைக்குகளில் டைகர் ஸ்போர்ட் 660 மற்றும் ட்ரைடென்ட் 660 மாடல்கள் சுமார் 7,500 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் முன்பக்க பிரேக்கில் குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
Read More – புதிய Snapdragon சிப்செட்டை அறிமுகம் செய்தது Qualcomm!
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் (NHTSA)விதிப்படி, 573 பாதுகாப்பு பிரிவின் கீழ் குறைபாடு உள்ள பைக்குகளை திரும்ப அழைக்கும் அறிக்கை அந்நிறுவனம் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் (Triumph) கூற்றுப்படி, எந்திரப் பிழையின் காரணமாக பைக்குகள் திரும்ப பெறப்படுகின்றன என்றும், முன்பக்க ஃபோர்க் கேப்களில் உள்ள வயர்கள் அதிவேகமாக செல்லும்போது கழன்று விழும் சூழலில் இருக்கிறது என காரணத்தை டிரம்ப் விவரிக்கிறது.
Read More – ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..
இந்த ஃபோர்க் கேப், முன் சஸ்பென்ஷன் ஆகிய பாகங்களை தாய்லாந்தை சேர்ந்த ஹிட்டாச்சி அஸ்டெமோ சோன்பூரி ஆட்டோ பார்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கண்ட அறிவிப்பின்படி, அமெரிக்காவில் உள்ள பைக் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை அங்கீகரிக்கப்பட்ட ட்ரம்ப் டீலரிடம் எடுத்துச் சென்று அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் உள்ள ஃபோர்க் கேப்களுக்குப் பதிலாக, புதிய பாகங்களை மாற்றி கொள்ளலாம். இவை இலவசமாக மாற்றிதரப்படும் என கூறப்பட்டுள்ளது.