மிட்சைஸ் செடான் ரகத்தில் புத்தம் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காரின் பாதுகாப்பு தரம் குறித்த கிராஷ் டெஸ்ட் முடிவு வெளியாகி இருக்கிறது. ஏசியன் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் புதிய டொயோட்டா யாரிஸ் கார் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.
புதிய டொயோட்டா யாரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டுமே வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், 15 அங்குல அலாய் வீல்கள், சுறா துடுப்பு ஆன்டென்னா, 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், பேடில் ஷிஃப்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர வருகிறது புதிய டொயோட்டா யாரிஸ் கார். புதிய டொயோட்டா யாரிஸ் காரின் விலை விபரம் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…