டொயோட்டா யாரிஸ் காரின் சாதனை..!

Default Image

மிட்சைஸ் செடான் ரகத்தில் புத்தம் புதிய டொயோட்டா யாரிஸ் செடான்  காரின் பாதுகாப்பு தரம் குறித்த கிராஷ் டெஸ்ட் முடிவு வெளியாகி இருக்கிறது. ஏசியன் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் புதிய டொயோட்டா யாரிஸ் கார் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு பெற்றது டொயோட்டா யாரிஸ்!பெரியவர் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் இந்த கார் மிகச் சிறப்பான புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. தாய்லாந்து நாட்டில் டொயோட்டா யாரிஸ் கார் வியோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வியோஸ் கார்தான் கிராஷ் டெஸ்ட் ஆய்வுக்கு உட்படுத்தி சோதிக்கப்பட்டது. இந்த சோதனை முடிவில் மிகச் சிறப்பான மதிப்பீடுகளை டொயோட்டா யாரிஸ் பெற்றிருக்கிறது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் அதிகபட்சமாக 36 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு பெற்றது டொயோட்டா யாரிஸ்!இதில், டொயோட்டா யாரிஸ் கார் 32.19 புள்ளிகள் பெற்று அசத்தி இருக்கிறது. முன்புற மோதல் சோதனை மற்றும் பக்கவாட்டு மோதல் சோதனைகளின்போது உள்ளே இருந்த மனித பொம்மைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு பெற்றது டொயோட்டா யாரிஸ்! சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் அதிகபட்சமாக 49 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டது. அதில், 42.44 புள்ளிகளை டொயோட்டா யாரிஸ் கார் பெற்று அசத்தி உள்ளது. மேலும், ஒட்டுமொத்த பாதுகாப்பு வசதிகளில் 18க்கு 11 என்ற புள்ளிகளை பெற்று சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்ற கார் என்பதை நிரூபித்துள்ளது. தாய்லாந்தில் விற்பனை செய்யப்படும் வியோஸ் காரின் பாதுகாப்பு அம்சங்களுக்கும், இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் யாரிஸ் காரின் பாதுகாப்பு அம்சங்களிலும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு பெற்றது டொயோட்டா யாரிஸ்!எனவே, இந்த கிராஷ் டெஸ்ட் ஆய்வு இந்தியர்களாலும் உற்று நோக்க வேண்டிய விஷயமாகி இருக்கிறது. இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டொயோட்டா யாரிஸ் காரில் அனைத்து வேரியண்ட்டுகளிலும் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இபிடி, பிரேக் அசிஸ்ட் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டுகளில் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன்புறம் மற்றும் பின்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள் என போட்டியாளர்களைவிட மிக அதிக பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டுமே வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், 15 அங்குல அலாய் வீல்கள், சுறா துடுப்பு ஆன்டென்னா, 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், பேடில் ஷிஃப்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர வருகிறது புதிய டொயோட்டா யாரிஸ் கார். புதிய டொயோட்டா யாரிஸ் காரின் விலை விபரம் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்