ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் கார்கள்…!!

Published by
Dinasuvadu desk

 

பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப விபத்துக்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை தேர்வு செய்வது அவசியமாகிறது. குறிப்பாக, விபத்தின்போது உயிர் காக்கும் காற்றுப் பை எனப்படும் ஏர்பேக் மிக முக்கிய பாதுகாப்பு வசதியாக இப்போது அனைத்து கார்களில் இடம்பெற துவங்கி இருக்கிறது.

விலை உயர்ந்த கார்களில் மட்டுமே கொடுக்கப்பட்ட ஏர்பேக் இப்போது சர்வசாதாரணமாக பட்ஜெட் கார்களிலும் இடம்பெறுகிறது. இந்த நிலையில், சில பட்ஜெட் கார்களில் சொகுசு கார்கள் போன்று 5 ஏர்பேக்குகள் வரை கொடுக்கப்படுகின்றன.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ காரின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இதுதவிர, இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கிறது. ஃபோர்டு ஃபிகோ காரில் எஞ்சின் இம்மொபைலைசர், கீலெஸ் சென்ட்ரல் லாக்கிங், வேகத்தை கணித்து கதவுகள் தானாக பூட்டும் வசதி, சைல்டு லாக் உள்ளிட்டவையும் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.7.58 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.8.48 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இதுதவிர்த்து, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலைசர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், சைல்டு லாக் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இபிடி பிரேக் தொழில்நுட்பம் இல்லை. பெட்ரோல் அஸ்ட்டா ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.8.93 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் அஸ்ட்டா ஆப்ஷனல் மாடல் ரூ.10.28 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு ஃபிகோ காரின் செடான் ரக மாடலான ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டாப் வேரியண்ட்டிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டுகளில் இந்த வசதி கிடைக்கிறது. இதுதவிர்த்து, இபிடி பிரேக் நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலைசர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் டோர் லாக் மற்றும் சைல்டு லாக் வசதிகள் கிடைக்கின்றன. பெட்ரோல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.8.16 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.9.32 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் என்ற க்ராஸ்ஓவர் ரக காரின் டாாப் வேரியண்ட்டிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. இந்த காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வழங்கப்படும் எக்ஸ்எக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டில் இந்த வசதி கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக இருக்கிறது. எஞ்சின் இம்மொபைலைசர், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், சைல்டு லாக் உள்ளிட்ட இதர வசதிகளும் உள்ளன. பெட்ரோல் எஸ்எக்ஸ் வேரியண்ட் ரூ.9.47 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் மாடல் ரூ.10.88 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வழங்கப்படும் விலை உயர்ந்த டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், பட்ஜெட் 10 லட்ச ரூபாயை தாண்டுகிறது. எனினும், காம்பேக்ட் எஸ்யூவியை வாங்குவோருக்கு பயன்படும் விதத்தில் இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம். ஏர்பேக்குகள் தவிர்த்து, ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை அளிக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.12.43 லட்சம் ஆன்ரோடு விலையிலும், டீசல் மாடல் ரூ.12.98 லட்சம் விலையிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ரூ.13.26 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

 

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

18 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

19 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

19 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

20 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

20 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

21 hours ago