உங்கள் காரில் படிந்துள்ள தார் கரையை நீக்க டிப்ஸ்..!
காரில் உள்ள தாரை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் அகற்றும் வழியை உங்களுக்காக வழங்கியுள்ளோம். தார் என்பது கருப்பு நிற அதிக பிசுபிசுப்பு தன்மையுள்ள ஒரு பொருள், புதிதாக போடப்பட்ட ரோட்டில் நாம் செல்லும் போது காரின் கீழ் பகுதியில் தார்கள் தெரிந்து பிடிந்திருக்கும். அவற்றை நீக்க மார்க்கொட்டில் சில வழிமுறைகள் உள்ளன.
தார் அதிக பிசுபிசுப்பு தன்மையுடன் இருப்பதால் அது உடனடியாக காரின் பெயின்ட்டுடன் ஓட்டிக்கொள்ளும், இதனால் காரில் இருந்து தாரை பிரிப்பது என்பது சற்று கடினம் தான். ஆனால் நீங்கள் உங்கள் காரை வேக்ஸ் செய்திருந்தால் காரின் பெயிண்ட் பாதிக்கப்படுதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
காரில் உள்ள தார் கரைகளை சுத்தப்படுத்த தார் ரிமூவர் என்ற ஒரு திரவ பொருள் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதை வாங்கி தார் படிந்த உள்ள இடங்களில் சிறிது சிறிதாக ஸ்பியரே செய்து ஒரு துணியை வைத்து துடைத்தால் காரில் தார் நீங்கும். இவ்வாறாக காரில் இருக்கும் தார் முழுவதையும் நீங்கள் அகற்ற வேண்டும். பின்னர் காரை நன்கு சுத்தப்படுத்தி பின்னர் காரை வேக்ஸ் செய்ய வேண்டும் இதன் மூலம் காரில் உள்ள தாரை அகற்றலாம். இதன் மூலம் காரின் பெயிண்ட் போகாமல் தாரை அகற்றலாம்.
தார் மிக கடினமாக உள்ளது என மிகவும் கடினமான பொருட்களான உப்புதாள், சில்வர் சவுரி ஆகியவற்றை வைத்து தேய்த்து விடாதீர்கள்… இது காரின் பெயிண்ட்டை பாதிக்கும். இதனால் உங்கள் காரின் தோற்றம் நாசமாகிவிடும். இச்சம்பவத்தில் காரில் படிந்துள்ள தார் கரைகள் அதிகளவு இருப்பதால் அந்த அளவிற்கு ஏற்ப தார் ரிமூவரை பயன்படுத்த வேண்டும்.
பின்னர் கண்ணாடியை தனியாக சுத்தப்படுத்த வேண்டும். இதை எவ்வளவு சீக்கரம் முடியுமே அவ்வளவு சீக்கரம் செய்ய வேண்டும். ஏன் என்றால் தார் என்பது நாளாக நாளாக இறுகிவிடும். இதனால் அதிக நாட்கள் கழித்து இதை செய்ய முயன்றால் காரில் உள்ள தாரை அகற்றுவது என்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும்.
.