மெர்சிடிஸ் பென்ஸ் காரின் விலை குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயர் பதிலளித்துள்ளார்.
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) ஆனது ஆடம்பர வாகனங்கள், பேருந்துகள், பெட்டிகள் மற்றும் டிரக்குகளை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற ஒரு புகழ்பெற்ற, பழமையான ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே மக்களிடையியே நல்ல மதிப்பினை பெற்றுள்ளது.
புதுமையான வடிவமைப்புடன் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இந்நிறுவனம் பல மாடல் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், சமீபத்திய ஆண்டுகளில், மெர்சிடிஸ் பென்ஸ் மின்சார வாகனங்களை தீவிரமாக உருவாக்கி வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தாலும், இந்த சொகுசு காரை அனைவராலும் வாங்க முடியாது.
ஏனெனில் மெர்சிடிஸ் நிறுவனம் புகழில் மட்டுமல்லாமல் விலையிலும் உச்சத்திலேயே உள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் பேட்டி ஒன்றில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அது என்னவென்றால், உங்களின் கார்கள் மட்டும் ஏன் இவ்வளவு விலை உயர்ந்ததாக உள்ளது என்பதுதான்.
அதற்கு பதில் அளித்த அவர் ‘ஒவ்வொரு புதுமையான படைப்புக்கும் ஒரு செலவாகும்’ என்று கூறினார். மேலும், பல ஆண்டுகளுக்கு கார் தயாரிப்புகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று கார்களை தயாரித்து அதனை மலிவான விலைக்கு விற்பது. மற்றோன்று காரில் பயணிப்பவரின் பாதுகாப்பிற்கான செயல்முறைகளை மேம்படுத்தி அறிமுகப்படுத்துவது. இதில் நாங்கள் இரண்டாவது முறையைத் தேர்வு செய்தோம்.
எனவே எங்களது வாகனங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதற்கு அதற்கு தேவையான தொழில்நுட்பங்களை உட்புகுத்துவது, குறிப்பாக சீட் பெல்ட் உள்ளிட்ட விதை கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் அதிகமாக செலவிடுவோம். அதன் காரணமாகத்தான் எங்களது கார்கள் அதிக விலைக்கு சந்தைகளில் விற்கப்படுகின்றன என்று சந்தோஷ் ஐயர் கூறினார்
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…