இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

Dio H-Smart

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்டுத்தியுள்ளது

இருசக்கர வாகனங்களில் ஸ்கூட்டர் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால், ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டருக்கு இளைஞர்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பு உண்டு. அந்த வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், புதிய ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் (Honda Dio H-Smart) ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Dio H-Smart
Dio H-Smart [Image Source : Twitter/@didarmotors]

டியோ எச்-ஸ்மார்ட் (Dio H-Smart) பற்றிய சரியான விவரங்களை ஹோண்டா வெளியிடவில்லை. ஆனால், ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ளது போல ஸ்மார்ட் கீ (smart key) வசதியை கொண்டுள்ளது. ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பிறகு ஸ்மார்ட் கீ வசதியை கொண்டுள்ள மூன்றாவது ஸ்கூட்டர் இதுவாகும்.

Dio H-Smart
Dio H-Smart [Image source : file image]

இந்த ஸ்மார்ட் கீயில் ஸ்மார்ட் பைண்ட், ஸ்மார்ட் அன்லாக், ஸ்மார்ட் சேஃப், ஸ்மார்ட் ஸ்டார்ட் என்ற 4 அம்சங்கள் உள்ளன. ஸ்மார்ட் பைண்ட் என்ற அம்சத்தை பயன்படுத்தி ஸ்கூட்டர் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்துக் கொள்ளலாம். ஸ்மார்ட் சேஃப் என்ற அம்சத்தின் மூலம் தூரத்தில் இருந்து கூட உங்களது ஸ்கூட்டரை லாக் செய்ய முடியும்.

Dio H-Smart
Dio H-Smart [Image source : file image]

பிறகு, ஸ்மார்ட் அன்லாக் என்ற அம்சத்தை பயன்படுத்தி ஸ்கூட்டரை லாக்கில் இருந்து எடுக்கலாம். மேலும், ஸ்மார்ட் ஸ்டார்ட் வசதி மூலம் சாவி இல்லாமல் ஸ்டார்ட் பட்டனை மற்றும் அழுத்தி ஸ்கூட்டரை ஆன் செய்யலாம். ஹோண்டா டியோவில் பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய 109சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் உள்ளது.

Dio H-Smart
Dio H-Smart [Image source : file image]

இது 7.73 பிஎச்பி மற்றும் 8.9 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.77,712 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. STD, DLX என்ற மற்ற இரண்டு வேரியண்டுகளும் ரூ.70,211 மற்றும் ரூ.74,212 விலையில் விற்பனைக்கு உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்