கடும் போட்டியைக் கொடுக்க களமிறங்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி(hyundai creta suv) .! புதிய வடிவில்..!
சந்தையில் போட்டி அதிகரித்து வருவதை மனதில் கொண்டு புதுப்பொலிவுடன் க்ரெட்டா எஸ்யூவியை(hyundai creta suv) விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹூண்டாய். தொடர்ந்து ஸ்பை படங்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த மாதம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் புதிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. புதிய புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. புதிய பம்பர் அமைப்பு, ஏர்டேம் என கூடுதல் வசீகரத்தை பெற்றிருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் இரட்டை வண்ணக் கலவையும் கொடுக்கப்பட இருக்கிறது.
வெள்ளை வண்ண காரில் கருப்பு வண்ணக் கூரையுடன் கூடிய டியூவல் டோன் மாடல்கள் விலை உயர்ந்த ரகத்தில் விற்பனை செய்யப்படும். சன்ரூஃப் மற்றும் இரட்டை வண்ண அலாய் சக்கரங்களும் புதிதாக இருக்கும். பின்புறத்திலும் சில மாற்றங்களுடன் வருகிறது.
புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இல்லை. தற்போது பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும் 154 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 224 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 256 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் அனைத்து எஞ்சின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.