விரைவில் வர இருக்கும் புதிய ஹோண்டா அமேஸ் கார்..!
புதிய ஹோண்டா அமேஸ் கார், அடுத்த மாதம் 16ந் தேதி விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.
புதிய ஹோண்டா அமேஸ் காரில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் குறித்த தகவல்கள் புதிதாக வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோ மூலமாக தெரிய வந்துள்ளது. அதில், எஞ்சின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா ஆகியவை முக்கிய அம்சங்களாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஹோண்டா அமேஸ் காரில் வலிமையான க்ரோம் க்ரில் அமைப்பு முகப்பு கம்பீரத்தை கூட்டுகிறது.
அத்துடன் புதிய ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குளும் இடம்பெற்றுள்ளன. பழைய மாடலைவிட பானட் அமைப்பு உயர்த்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இன்டீரியர் காரின் உட்புறத் தோற்றத்தை அழகுற செய்துள்ளது. 7 அங்குல அளவுடைய தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளன.
க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்களும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடலில் 14 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், புதிய அமேஸ் காரில் 15 அங்குல அலாய் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 109 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த வல்லது.
டீசல் எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த வல்லதாக இருக்கும். பெட்ரோல், டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் தவிர்த்து சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட இருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது. முதல்முறையாக டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் காரில் ஏர்பேக்குகள், இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற இருக்கிறது. பேஸ் மாடல்களில் டியூவல் ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற இருக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் கார் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.