மிகவும் எதிர்பார்க்கப்பட புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி(Mitsubishi Outlander SUV) இப்பொது இந்தியாவிலும்..!

Default Image

மிகவும் எதிர்பார்க்கப்பட புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவிக்கு(Mitsubishi Outlander SUV) இந்தியாவில் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்ட்ர் எஸ்யூவி இந்தியாவில் பெட்ரோல் மாடலில் மட்டுமே வர இருக்கிறது. டீசல் எஞ்சின் ஆப்ஷன் இல்லை. மேலும், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. 

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 222 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்!!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் ஆல் வீல் கன்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் பல்வேறு நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொண்டு ஓட்டும் வசதியை அளிக்கும் டிரைவிங் மோடு வசிதிகளை பெற்றிருக்கிறது.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்!!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. 16 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

உட்புறத்தில் 6.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. லெதர் இருக்கைகள், லெதர் உறையுடன் கூடிய கியர் லிவர், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 710 வாட் ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. எலக்ட்ரிக் சன்ரூஃப், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் வசதிகளும் உள்ளன.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்!!

இந்த கார் 7 சீட்டர் மாடலில் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பிளாக் பியர்ல், காஸ்மிக் புளூ, ஓரியண்ட் ரெட், கூல் சில்வர், ஒயிட் சாலிட், ஒயிட் பியர்ல் மற்றும் டைட்டானியம் க்ரே ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும்.

அடுத்த மாதம் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்