வோல்க்ஸ்வேகன் போலோபேஸ் (Volkswagen Polopece), வென்ட்டோ (Vento) கார்களின் புதிய மாடல் .!

Default Image

வோல்க்ஸ்வேகன்(Volkswagen)போலோ பேஸ் மற்றும் வென்ட்டோ(Vento) ஸ்போர்ட் என்ற பெயரில் புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த சிறப்பு பதிப்பு மாடல்களுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

வோல்க்ஸ்வேகன் போலோ பேஸ் சிறப்பு பதிப்பு மாடலில் 15 அங்குல டைமண்ட் கட் ரேஸர் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கார் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.மேலும் பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

வோல்க்ஸ்வேகன் வென்ட்டோ ஸ்போர்ட் காரில் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண கூரை மற்றும் ஸ்பாய்லருடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கின்றன.

அதேபோன்று, பக்கவாட்டில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் மற்றும் ஸ்போர்ட் பேட்ஜ் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

வோல்க்ஸ்வேகன் வென்ட்டோ ஸ்போர்ட் எடிசன் மாடலானது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு.

வோல்க்ஸ்வேகன் போலோ பேஸ் எடிசன் காரின் ஆரம்ப நிலை மாடல் ரூ.5.42 லட்சம் விலையிலிருந்தும், வென்ட்டோ ஸ்போர்ட் எடிச:ன் மாடல் ரூ.8.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப்புகளிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

The introduction of the special edition model of Volkswagen Polo and Vento Cars

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்