லிமோசினஸ் காரில்(limousine car) பயணம் செய்யப்போகும் அதிபர்..!
லிமோசினஸ் காரை(limousine car), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் பயணத்திற்காக அந்நாட்டு அரசு புதிய வாங்குகிறது. வரும் மே மாதம் முதல் புட்டின் அந்த காரில் தான் பயணம் செய்வார் என கூறப்பட்டுள்ளது.
உலக தலைவர்களுக்கான கார்களில் பல ரகசிய அம்சங்கள் நிறைந்திருக்கும். அந்த கார்களில் உள்ள அம்சங்கள் ராணுவ ரகசியம் போல பாதுகாக்கப்படும் சில சாதாரண அம்சங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும். இது போன்ற கார்களை அமெரிக்க அதிபர், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் என உலகின் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பயன்படுத்துவர். அந்த வகையில் ரஷ்ய அதிபரும் இந்த வகையான காரையே பயன்படுத்தி வருகிறார்.
தற்போது அவர் பயணித்து வரும் காரை விட அதிக அம்சங்களுடன் நிறைந்த காரை தயாரிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன்படி புதிய லிமோஸிங் ரக கார்கள் தயாரிக்கப்பட்டது. ரஷ்ய நாட்டு வர்த்தக அமைச்சர் அளித்த தகவலின் படி அந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்துக்குள்ளவதற்கான சோதனை நடத்தப்பட்டது. அதாவது அந்த காரை கொண்டு செயற்கையாக சில விபத்துக்கள் நிகழ்த்தப்படும். அதில் அந்த கார் எவ்வளவு சேதமாகிறது என்பது கணக்கிடப்படும். அ
தில் அந்நாட்டு அரசு எதிர்பார்த்த அளவு அந்த கார் குறைந்த சேதங்களையே ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு கடந்த சில நாட்களுக்க முன்னர் நடந்த செயற்கை விபத்து பரிசோதனையில் அந்த கார் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த காரை அதிபர் புட்டினின் பயன்பாட்டிற்காக பயன்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் அந்த கார் அரசிடம் கட்டுமானங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
தொடர்ந்து வரும் மே மாதம் 7ம் தேதி முதல் அந்த காரை அதிபர் புட்டின் பயன்படுத்த இருக்கிறார். இதற்கிடையில் காரில் புட்டின் ஒரு முறை பயணம் செய்து காரில் எந்த இடம் தனக்கு வசதியாகவும் சொகுசாவும் இருக்கும் என அவர் முடிவு செய்வார். ஆனால் மே மாதம் தான் அந்த காரை மக்கள் பார்க்கமுடியும். புட்டின் பயன்படுத்தவுள்ள கார் குறித்த சில அடிப்படை தகவல்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் காரில் அதை விட நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு பல அம்சங்கள் நிறைந்திருக்கிறது.
இந்த காரை ஃபோர்ஸ் கார் நிறுவனம் வடிமைத்துள்ளது. இந்த காரில் 4.6 லிட்டர் வி8 டர்போசார்ஜ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 592 பிஎச்பி பவரையும், 650 அடி எல்பி டார்க் திறனையும் வெளிபடுத்தும் என கூறப்பட்டுள்ளது. இதில் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை கொண்டது. இந்த காரில் கிட்டத்தட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் காரில் உள்ள அதே அம்சங்களும் இதில் உள்ளன.
நல்ல ஏர் சப்ளே, விபத்து நடந்து புட்டினிற்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் அவரது புதிய ரத்தம் ஏற்ற ரத்தம் அடங்கிய பேக், சில இன்ச்கள் அடர்த்தியுள்ள புல்லட் புரூப் கார் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கார் ராக்கெட் லாஞ்சர்களையும் தாங்கும் என கூறப்படுகிறது.