4 மணி நேரம் சார்ஜ் போட்டால் 100 கி.மீ பயணம்.! அசத்தும் பஜாஜ் ஸ்கூட்டர்.!

Bajaj Chetak Electric Scooter

1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் கடந்து 2006வரை விற்பனையில் திகழ்ந்தது பஜாஜ்  சேத்தக் (Chetak) ஸ்கூட்டரை அவ்வளவு சீக்கிரம் மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதே பெயரை மீண்டும் வைத்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அறிமுகபடுத்தப்பட்ட பஜாஜ் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புது அப்டேட்கள் கொண்டு மேம்படுத்தி அந்த மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஜனவரி 9ஆம் தேதி பஜாஜ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பன் மற்றும் பிரீமியம் (சற்று கூடுதல் சிறப்பம்சங்களோடு) என இரண்டு விதமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்..!

ஏற்கனவே உள்ள சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது 2.8 கிலோ வாட் சார்ஜருடன் ஒருமுறை சார்ஜ் செய்தல் 113 கிமீ தூரம் செல்லும் வகையில் உள்ளது . தற்போது 3.2 கிலோ வாட் சார்ஜருடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 127 கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. ஒருமுறை முழுதாக சார்ஜ் செய்ய 4.30 மணிநேரம் ஆகும்.  இதன் அதிகபட்ச வேகமானது ஒரு மணிநேரத்திற்கு 73கிமீ தூரம் வரையில் செல்லும் திறன் கொண்ட எஞ்சினை கொண்டுள்ளது. தற்போது விற்பனையாகும் சேத்தக் ஸ்கூட்டர் மணிக்கு 63கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது.

புதிய அப்டேட் சேத்தக் ஸ்கூட்டரில் எல்இடி ஸ்க்ரீனில் இருந்து டிஎஃப்டி ஸ்க்ரீனுக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. மேலும் , ஒவ்வொரு திருப்பத்திற்கும் இதில் நேவிகேஷன் காட்டும் என்றும், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிமோட் லாக் மற்றும் அன்லாக், ப்ளூடூத் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் உள்ள கொள்ளளவை 18 லிட்டரில் இருந்து 21 லிட்டராக மாற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.. இந்த தகவல் எல்லாம் வரும் ஜனவரி 9ஆம் தேதி பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அப்டேட் வெர்சன் வெளியாகும் போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என  தெரிகிறது. தற்போது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை 1.15 லட்சம் முதல் 1.23 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்