இனிமேல் அதிரடிதான்…இந்தியாவில் அறிமுகமானது ‘BMW M2’ ஸ்போர்ட்ஸ் கார்..! விலை என்ன தெரியுமா..!
பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் பிஎம்டபிள்யூ எம்2 (BMW M2) ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை உலகம் மற்றும் சந்தைகளில் உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), அதிக செயல்திறன் கொண்ட பிஎம்டபிள்யூ எம்2 (BMW M2) ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இன்று முதல் நாட்டில் உள்ள கிடைக்கும்.
BMW M2 என்ஜின்:
இதில் மிகவும் சக்திவாய்ந்த இன்லைன் 6-சிலிண்டர் இன்-லைன் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 453hp பவர் அவுட்புட் மற்றும் 550 என்எம் உச்சகட்ட டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த கார் 0 விலிருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் அடைந்துவிடும்.
இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ முதல் 285 கிமீ ஆகும். ஆனது டிரைவ்லாஜிக் உடன் எட்டு கியர்களுடன் கூடிய டிரான்ஸ்மிஷனுடன் மிகவும் ஸ்போர்ட்டி கியர் ஷிப்ட்களை வழங்குகிறது. பிஎம்டபிள்யூ எட்டு கியர்களுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷனை வழங்குவது இதுவே முதல் முறை.
BMW M2 அம்சம்:
பிஎம்டபிள்யூ எம்2 ஸ்போர்ட்ஸ் கார், இரண்டு கதவுகள், நான்கு இருக்கைகள் கொண்டுள்ளது. இது 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனை உள்ளடக்கிய இரட்டை வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
இந்த காரில் 19/20-இன்ச் அலாய் வீல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில், ஸ்போர்ட்டி தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு ஸ்டிரைக்கிங் பம்பர், ஒரு டைனமிக் டிஃப்பியூசர் மற்றும் நான்கு எக்ஸாஸ்ட் பைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.