Tata Nexon EV: ரெடியா இருங்க..புக்கிங் ஸ்டார்ட் பண்ண போறாங்க..! டாடாவின் புதிய எலக்ட்ரிக் பதிப்பு.!

TataNexonEV

வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வாகனப்பிரியர்கள் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, அதன் புதிய பதிப்பான டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் பிரைம் மற்றும் மேக்ஸுக்குப் பதிலாக லாங் ரேஞ்ச் மற்றும் மிட் ரேஞ்ச் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் விலையானது செப்டம்பர் 14 அன்று வெளியிடப்படும். ஆனால் அதற்கு முன் செப்டம்பர் 9ம் தேதி, அதாவது நாளை காலை 8 மணி முதல் தொடங்கும். இதற்கான டோக்கன் கட்டணம் ரூ. 21,000 ஆகும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அல்லது நாடு முழுவதும் உள்ள டாடாவின் டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம்.

எக்ஸ்ட்டீரியர்:

இதன் வடிவமைப்பு ஆனது இதற்கு முன்னதாக அறிமுகமான டாடா கர்வ்வ் ஐஸ் காரைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இருந்தாலும் இதில் சிறு சிறு மாற்றங்கள் உள்ளன. இதில் சிங்கில் டோன் கலர், பாடி-கலர்டு அப்பர் கிரில், ட்ரெப்சாய்டல் ஹெட்லேம்ப் ஹவுசிங்களுக்கான தனித்துவமான ஸ்லேட்டட் டிசைன்கள், டிஆர்எல்களை இணைக்கும் எல்இடி லைட் மற்றும் சார்ஜ் அளவைக் காட்டும் எல்இடி லைட் ஆகியவை உள்ளன.

இன்டீரியர்:

இந்த காரின் டாஷ்போர்டில் 12.3 இன்ச் அளவுள்ள டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதே அளவிலான முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலக்ட்ரிக் சன்ரூஃப், மல்டி-மோட் பிரேக் ரீஜென், 360-டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதோடு வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், காற்றோட்டமான முன் இருக்கைகள், 9-ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் அடங்கும்.

பாதுகாப்பு:

பாதுகாப்பு அம்சங்களில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆறு ஏர்பேக்குகள், எக்ஸ்பிரஸ் கூலிங் மற்றும் ஆட்டோ டிஃபோகர் மற்றும் பலவற்றைக் கொண்ட தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, சீட் பெல்ட் அணியாததை நினைவூட்டும் அம்சம் ஆகியவை அடங்கும்.

வாகனத்தின் பேட்டரி மற்றும் மோட்டார் திறன்:

டாடா நெக்ஸான் இவி ஆனது புதிய ஜென்-2 மோட்டாரைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார் 20 கிலோ எடை குறைவாக உள்ளது. இதில் மிட் ரேஞ்ச் கார் ஆனது 30 kWh திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 465 கிமீ வரை செல்லும். லாங் ரேஞ்ச் காரில் 40.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 325 கிமீ வரை செல்லும்.

இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 7.2kW ஏசி ஹோம் வால்பாக்ஸ் சார்ஜர் உள்ளது. இதை வைத்து நெக்ஸான் இவி மிட் ரேஞ்ச் காரை 4.3 மணிநேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். மிட் ரேஞ்ச் மோட்டார் ஆனது 127 ஹெச்பி சக்தியையும் 215 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.

நெக்ஸான் லாங் ரேஞ்ச் காரில் இருக்கும் பேட்டரியை 6 மணிநேரத்தில் முழுவதும் சார்ஜ் செய்ய முடியும். லாங் ரேஞ்ச் மோட்டார் ஆனது 143 ஹெச்பி சக்தியையும் 215 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த டாடா எலக்ட்ரிக் கார் ஆனது ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு சார்ஜ் திறனையும் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்