TATA Motors : இந்தியாவில் அறிமுகமானது TATA-வின் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்கள்..!

Published by
அகில் R

இந்தியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமான  டாடா மோட்டார்ஸ் தற்போது டாடா டியாகோ சிஎன்ஜி எஎம்டி (Tiago CNG AMT) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி எஎம்டி (Tigor CNG AMT) கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகியவை இந்தியாவில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) கொண்ட முதல் சிஎன்ஜி (CNG) கார்கள் ஆகும்.

காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!!

டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் கார்களின் வடிவமைப்பு :

டியாகோ மற்றும் டிகோர் கார்கள் ஆகியவை புதிய கார்கள் அல்ல, மேனுவல் கியர்பாக்ஸ் எல்லாம் சில காலமாக விற்பனையில் தான் இருந்து வருகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாறுபாடுகள் எல்லாம் எ.எம்.டி (AMT) வெர்சன் ஆன ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஆகும். எனவே அதுவும் மேனுவல் வெர்சன்களின் அதே பிளாட்போர்ம்களின் அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

டியாகோ மற்றும் டிகோர் இன்ஜின் விவரக்குறிப்புகள் :

டியாகோ மற்றும் டிகோர் கார்கள் இரண்டும் 1.2-லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன, இது பெட்ரோலில் இயங்கும் போது 85bhp மற்றும் 113Nm டார்க்கை உருவாக்குகிறது.

மேலும் சிஎன்ஜி (CNG) முறையில், அவை சற்றே குறைவான சக்தியை உருவாக்குகின்றன. இருந்தாலும், புதிய டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி (CNG), எஎம்டி (AMT) டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன என்பதே மிகப்பெரிய வித்தியாசமாகும்.

டியாகோ மற்றும் டிகோர் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகின்றன. இது பெட்ரோல் பயன்முறையில் 86PS மற்றும் 113Nm மற்றும் CNG பயன்முறையில் 73.4PS மற்றும் 95Nm ஆகியவற்றை உருவாக்குகிறது.

டாடா டியாகோ காரின் வேரியண்ட் வாரியான விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

  • XTA              – ரூ 7,89,900
  • XZA+           – ரூ 8,79,900
  • XZA+ DT    – ரூ 8,89,900
  • XZA NRG   – ரூ 8,79,900

டாடா டிகோர் காரின் வேரியண்ட் வாரியான விலைகள். இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

  • XZA      – ரூ 8,84,900
  • XZA+   – ரூ 9,54,900
Published by
அகில் R

Recent Posts

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

18 minutes ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

1 hour ago

புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…

1 hour ago

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

14 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

15 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

16 hours ago