TATA Motors : இந்தியாவில் அறிமுகமானது TATA-வின் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்கள்..!
இந்தியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது டாடா டியாகோ சிஎன்ஜி எஎம்டி (Tiago CNG AMT) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி எஎம்டி (Tigor CNG AMT) கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகியவை இந்தியாவில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) கொண்ட முதல் சிஎன்ஜி (CNG) கார்கள் ஆகும்.
காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!!
டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் கார்களின் வடிவமைப்பு :
டியாகோ மற்றும் டிகோர் கார்கள் ஆகியவை புதிய கார்கள் அல்ல, மேனுவல் கியர்பாக்ஸ் எல்லாம் சில காலமாக விற்பனையில் தான் இருந்து வருகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாறுபாடுகள் எல்லாம் எ.எம்.டி (AMT) வெர்சன் ஆன ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஆகும். எனவே அதுவும் மேனுவல் வெர்சன்களின் அதே பிளாட்போர்ம்களின் அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
டியாகோ மற்றும் டிகோர் இன்ஜின் விவரக்குறிப்புகள் :
டியாகோ மற்றும் டிகோர் கார்கள் இரண்டும் 1.2-லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன, இது பெட்ரோலில் இயங்கும் போது 85bhp மற்றும் 113Nm டார்க்கை உருவாக்குகிறது.
மேலும் சிஎன்ஜி (CNG) முறையில், அவை சற்றே குறைவான சக்தியை உருவாக்குகின்றன. இருந்தாலும், புதிய டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி (CNG), எஎம்டி (AMT) டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன என்பதே மிகப்பெரிய வித்தியாசமாகும்.
டியாகோ மற்றும் டிகோர் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகின்றன. இது பெட்ரோல் பயன்முறையில் 86PS மற்றும் 113Nm மற்றும் CNG பயன்முறையில் 73.4PS மற்றும் 95Nm ஆகியவற்றை உருவாக்குகிறது.
டாடா டியாகோ காரின் வேரியண்ட் வாரியான விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
- XTA – ரூ 7,89,900
- XZA+ – ரூ 8,79,900
- XZA+ DT – ரூ 8,89,900
- XZA NRG – ரூ 8,79,900
டாடா டிகோர் காரின் வேரியண்ட் வாரியான விலைகள். இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
- XZA – ரூ 8,84,900
- XZA+ – ரூ 9,54,900