ஏப்ரல் 1 முதல் டாடாவின் வணிக வாகனங்களின் விலை உயர்வு!
Tata Motors : ஏப்ரல் 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. நாட்டில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார்கள், பயன்பாட்டு வாகனங்கள், ஆட்டோ, டாக்சி, டிரக்குகள் உள்ளிட்ட வணிக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது.
Read More – காசாவுக்கு நல்லது செய்ய நினைத்த அமெரிக்கா…5 பேர் உயிரை காவு வாங்கிய பாராசூட்.!
இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் செயல்படும் இந்நிறுவனம், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் சார்க் ஆகிய நாடுகளிலும் தனது வாகனங்களை சந்தைப்படுத்துகிறது.
Read More – ஜப்பானிய தொழில்நுட்பம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம்.! அசத்தும் Komaki Ranger.!
இந்த சூழலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை இரண்டாக பிரிக்க உள்ளதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. அதாவது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வணிக வாகனங்கள் மற்றும் பயணியர் வாகன வணிகங்கள் என பிரித்து, தனி நிறுவனங்களின் கீழ் கொண்டு வர உள்ளதாக கூறப்பட்டது.
Read More – குண்டுவெடிப்பு சம்பவம்… பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் திறந்த ராமேஸ்வரம் கஃபே!
இந்த அறிவிப்பை தொடர்ந்து டாடா நிறுவனத்தின் பங்கின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஏப்ரல் 1 முதல் தனது வணிக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்தது. இந்த விலை உயர்வு உள்ளீடு செலவுகளை ஈடு செய்யும் என்றும் வணிக வாகனங்களின் மாடலுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.