டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு(toyota fortuner) போட்டியாக வரும் டாடா எச்7எக்ஸ்(Tata H7X)…!!!

Default Image

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு(toyota fortuner) போட்டியாக வரும் புதிய டாடா எஸ்யூவியின்(tata suv) ஸ்பை படங்கள் புதிய அம்சங்களுடன் வெளியாகி இருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த எஸ்யூவி தீவிர சோதனை ஓட்டங்களில் இருந்து வருகிறது. இந்த நிலையில், டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் எச்7எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்த புதிய எஸ்யூவியும் மிக தீவிரமான சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் ஊட்டியில் வைத்து இந்த எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியுடன் வரும் இந்த புதிய எஸ்யூவி லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட எல்550 பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

டாடா எச்7எக்ஸ் எஸ்யூவி அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமான ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ், வலிமையான பில்லர்கள், கம்பீரமான அலாய் வீல்களுடன் இந்த கார் எஸ்யூவி இருக்கிறது.

டாடா எச்7எக்ஸ் எஸ்யூவி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  ஆனால், மூன்றாவது வரிசை இருக்கைக்காக சி பில்லர் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. டாடா எச்7எக்ஸ் எஸ்யூவியின் கேபின் மிகவும் தாராள இடவசதியுடன் பிரிமியம் வசதிகளை பெற்றிருப்பது தெரிய வருகிறது. எச்டி திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், சர்ரவுண்ட் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

மூன்று வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். புதிய டாடா எச்7எக்ஸ் எஸ்யூவியில் 2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் இடம்பெற இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

6 ஸ்பீடு மேனுவல் அல்லது இசட்எஃப் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புதிய டாடா எச்7எக்ஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori