அப்படி என்ன ஸ்பெஷல் தான் உள்ளது இந்த மாருதி சுசுகி ஸ்விப்டில் ?இதோ அதன் சிறப்பு ….

Published by
Venu

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் மாருதியின் புகழ்பெற்ற காரான ஸ்விப்ட்  விற்பனையில்  பல்வேறு சாதனைகளை   படைத்துள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் காராக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. மாருதி ஸ்விப்ஃட் கார் இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இதன் மேம்பட்ட 3ம் தலைமுறை இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

புதிய 2018 ஸ்விஃப்ட், காரானது தற்போதுள்ள மாடலை விட ரூ.60,000 கூடுதல் விலை கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ 5.8 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான விலையில் புதிய ஸ்விஃப்ட் கிடைக்கலாம்.  ஆட்டோ டிரான்ஸ்மிஷன் (Auto Transmission) வசதியினை ஆப்ஷனலாக கொண்டதாகவும்,
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களில் கிடைக்கும்.

முந்தைய மாடலில் இருந்த அதே 1.2 லிட்டர் K-Series பெட்ரோல் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சின் இந்த புதிய காரிலும் இருக்கிறது.அடுத்த வாரம் டெல்லியில் நடக்கவுள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்தக் கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ளது.

முதன் முதலில் ஸ்விஃப்ட் இந்தியாவிற்கு வந்து விற்பனை துவங்கியதிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை 17 லட்சம் கார்களை விற்பனை செய்தது.

Related image

2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்: 

1. மாருதி சுசூகி நிறுவனமானது புதிய ஸ்விஃப்ட் காரின் அதிகாரப்பூர்வமான விலையை அடுத்த வாரம் வெளியிட உள்ளது.

2. ஸ்விஃப்ட் காருக்கு கடந்த மாதத்திலிருந்தே முன் பதிவுகள் தொடங்கியுள்ளது.

புதிய ஸ்விஃப்டின் ஸ்டைலிங் மற்றும் தோற்றமான பலரின் விருப்பத்திற்கு ஏற்றவ்வாரு வாடிக்கையாளர்களளின் கண்களை கவர்ந்து வருகின்றது. மேலும், ஸ்விஃப்டின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

10 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

10 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

11 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

12 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

12 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

13 hours ago