முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750(Suzuki GSX-S 750)

Published by
Dinasuvadu desk

 

ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களுடன் புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750  வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், ரூ.7.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கை தொடர்ந்து இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடல் இதுவாகும்.

புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கில் 4 சிலிண்டர் அமைப்புடைய 749சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்1000 சூப்பர் பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

வலிமையான பெட்ரோல் டேங்க், புடைப்பான எஞ்சின் பகுதி, கூர்மையாக தோற்றமளிக்கும் ஹெட்லைட் ஹவுசிங் ஆகியவை பைக்கிற்கு மிரட்டல் தோற்றத்தை தருகின்றன. புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கில் எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

குறைவான எஞ்சின் சுழல் வேகத்தில் ஓட்டும்போது எஞ்சின் ஆஃப் ஆகாமல் குறிப்பிட்ட அளவில் எஞ்சின் சுழல் வேகத்தை அதிகரித்து தக்க வைக்கும் லோ ஆர்பிஎம் அசிஸ்ட், பட்டனை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதி, 3 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக இருக்கின்றன. புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக்கில் கேஒய்பி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று, முன்சக்கரத்தில் 310மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க்குகள் கொண்ட பிரேக்கும், பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது. புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் இரண்டு வண்ணங்களில்கிடைக்கும். ஒன்று மெட்டாலிக் டிரைட்டன் புளூ மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலும், மற்றொன்று கேண்டி டேரிங் ரெட் என்ற வண்ணத்திலும் கிடைக்கும்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

4 minutes ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

31 minutes ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

1 hour ago

பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

அத்திவரதர் 40 வருடங்கள் நீரில் மூழ்கி இருக்க காரணம் என்ன தெரியுமா.?

40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை  தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

2 hours ago