புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலை, சுசூகி நிறுவனம் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் மேக்சி-ஸ்கூட்டர் எனும் வடிவமைப்பு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்படும் போது ஹோண்டா கிரேசியா, TVS NTORQ மற்றும் அப்ரிலிய SR125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
இந்த மாடல் பெரிய விண்ட் ஸ்க்ரீன், எக்ஸ்போஸ்ட் ஹேண்டில் பார், LED முகப்பு விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் LED பின்புற விளக்குகள் என வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் சுசூகி ஆக்சஸ் மாடலில் உள்ள 125cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7PS @ 7,000rpm திறனையும் 10.2Nm @ 5,000rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் CVT கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலின் முன்புறம் டிஸ்க் பிரேக்கும் பின்புறம் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…