சுசூகி பர்க்மேன் (suzuki burgman 125) ஸ்கூட்டர் புதிய மாடல் அறிமுகம்.!

Default Image

புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலை, சுசூகி நிறுவனம்  2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் மேக்சி-ஸ்கூட்டர் எனும் வடிவமைப்பு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்படும் போது ஹோண்டா கிரேசியா, TVS NTORQ மற்றும் அப்ரிலிய SR125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இந்த மாடல் பெரிய விண்ட் ஸ்க்ரீன், எக்ஸ்போஸ்ட் ஹேண்டில் பார், LED முகப்பு விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் LED பின்புற விளக்குகள் என வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் சுசூகி ஆக்சஸ் மாடலில் உள்ள 125cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7PS @ 7,000rpm திறனையும் 10.2Nm @ 5,000rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் CVT கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலின் முன்புறம் டிஸ்க் பிரேக்கும் பின்புறம் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்