பெரும்பாலும் எல்லா கார்களிலும் இன்ஜின் சூடு குறித்த நிலை காட்டும் கருவி இருக்கும். இது பெரும்பாலும் அதிகமான சூட்டிற்கும், அதிகமான குளிருக்கும் இடையே நிற்கும் அப்படி இருந்தால் தான் உங்கள் இன்ஜினில் சரியான சூடு நிலை நிலவுகிறது என அர்த்தம். மாறாக அதிகமான சூட்டிலோ, அல்லது அதிகமான குளிரிலோ இன்ஜின் இருந்தால் அது நிச்சயம் நீங்கள் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
உங்கள் காரில்இருந்து புகை வந்தால் அது ரேடியேட்டரில் லீக் உள்ளது என்று அதர்த்தம் அதை நீங்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். ஹீட்டரை ஆன் செய்யுங்கள் உங்கள் காரில் உள்ள ஏசியில் ஹீட்டர் என்கிற ஆப்ஷன் காரின் இன்ஜினில் உள்ள ஹீட்டை தான் பெற்று தரும். ஆகையால் நீங்கள் ஏசியில் ஹீட்டரை ஆன் செய்யுங்கள் இதனால் விரைவில் இன்ஜினில் உள்ள ஹீட் குறையும்.
கூலிங் பேனை செக் செய்யுங்கள் கார் இன்ஜினில் அதிக சூடேறாமல் பாதுகாப்பது கூலிங் பேன் தான். அதனால் நீங்கள் கூலிங் பேனை செக் செய்யுங்கள் கூலிங் பேனில் ஏதேனும் சிக்கியிருந்தால் பேன் சுற்றலாமல் இன்ஜின் சூடாகியிருக்கலாம். அல்லது கூலிங் பேனில் பியூஸ் போயிருக்கலாம். பியூஸ் போயிருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். இருந்தாலும் கூலிங் பேன் வேலை செய்யாமல் நாம் குறைந்த வேகத்தில் டிராபிக் இல்லாத இடங்களில் வாகனத்தை ஓட்டலாம், டிராபிக் நிறைந்த இடங்களிலும் வேகமாக ஓட்டுவதும் செய்க்கூடாது. கூலண்ட் அளவை சரி பாருங்கள் கார் இன்ஜின் ஹீட்டை குறைக்க உதவும் கூலண்டின் அளவை சரி பாருங்கள் நீங்கள் கூலண்ட்டை மாற்ற மறந்திருந்தாலும், இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படலாம். கார் இன்ஜின் சூடாக இருக்கும் போது கூலண்டை திறக்க கூடாது.
சூடு குறைந்ததும்.திறந்து பாருங்கள் போதிய அளவு கூலண்ட் இல்லை என்றால் அதை மாற்ற வேண்டும். கூலண்ட் சுத்தமாக இல்லை என்றால் ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றி அருகில் உள்ள மெக்காணிக் ஷாப் வரை காரை ஓட்டி செல்லலாம்.
கசிவுகளை கவனியுங்கள் காரின் கூலண்ட், கூலிங் பேன் என எல்லாம் சரியாக இருந்தும் இன்ஜின் அதிகமாக ஹீட் ஆகிறது என்றால் காரின் சில இடங்களில் கசிவுகள் இருக்கலாம்.
காரை நீங்கள் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நகரும் போது காரில் இரந்து பச்சை நிறத்தில் ஆயில் கசிந்தி நீங்கள் கார் நிறுத்திய இடத்தில் சிந்தியுள்ளதா? என்பதை கவனியுங்கள். அவ்வாறு இருந்தால் அந்த கசிவு உள்ள வால்வை சரி செய்ய வேண்டும். அப்பகதியை செல்லோ டேப் மூலமே, எம் சீல் மூலமோ அப்பகுதியை தற்காலிகமாக அடைத்து விட்டு காரை மெக்கானிகிடம் எடுத்து செல்லலாம். ரேடியேட்டரை சுத்தமாக வைத்திருங்கள் உங்கள் ரேடியேட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உங்கள் ரேட்டியட்டரில் கசடுகள் வருவாகி தடைகள் இருந்தால் இது போன்ற சூடாகும் பிரச்னைகள் வரும்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…