புத்தம் புதிய மாருதி எர்டிகா கார் , இந்தோனேஷியாவில் நடக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் சுஸுகி பிராண்டில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்தியா வர இருக்கும் இந்த எர்டிகா காரின் டாப்- 10 சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
முகப்பு க்ரில் அமைப்பு முற்றிலும் க்ரோம் பட்டைகளுடன் பின்னப்பட்டு வசீகரிக்கிறது. பம்பர் பகுதியும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பெற்றிருக்கிறது. டபுள் பேரல் புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டு டிசைனும் இன்னோவா க்ரிஸ்ட்டா போன்று டிசைன் தாத்பரியங்களை காண முடிகிறது. குறிப்பாக, டி பில்லரின் டிசைன் அப்படியே காட்சி தருகிறது.
மேம்பட்ட இடவசதி புதிய மாருதி எர்டிகா கார் நீளத்தில் 99 மிமீ வரையிலும், அகலத்தில் 40 மிமீ வரையிலும், உயரத்தில் 5 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புற இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, பூட் ரூம் இடவசதி பெரும் குறை. 135 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இப்போது 153 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
பெரிய பூட்ரூம் புதிய மாருதி எர்டிகா காரில் நடுவில் இருக்கும் இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடக்க முடியும். மூன்றாவது வரிசை இருக்கையை 50:50 என்ற அளவில் மடக்கிக் கொண்டு பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும். இதன்மூலமாக, பொருட்கள் வைத்து எடுத்துச் செல்வதற்கு 800 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதியை அதிகபட்சமாக பெறலாம்.
புதிய மாருதி எர்டிகா காரில் டேஷ்போர்டு முற்றிலும் புதியதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பீஜ் வண்ண டேஷ்போர்டில் ஃபாக்ஸ்வுட் மரத் தகடுகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டின் நடுவே குட்டி டிவி போன்ற 6.8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் வசதி, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதியுடன் வருகிறது.
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இரண்டு டயல்களுக்கும் நடுவில் தகவல்களை அளிக்கும் எம்ஐடி என்ற முக்கியத் தகவல்களை காட்டும் டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடல் போன்றே ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ரூஃப் மவுண்ட் ஏசி சிஸ்டமும் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மூன்று வரிசை பயணிகளுக்கும் சிறப்பான குளிர்ச்சியை உணர முடியும். புதிய மாருதி எர்டிகா காரில் முன்புற பயணி மற்றும் ஓட்டுனருக்கு மட்டும் இரண்டு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
பயணிகளுக்கான கூடுதல் ஏர்பேக் இல்லை. கார் அதிக நிலைத்தன்மையுடன் செல்ல உதவும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான விகிதத்தில் பிரித்தனுப்பும் இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ரியர் பார்க்கிங் சென்சாரும் வழங்கப்படுகிறது. புதிய பெட்ரோல் எஞ்சின் தற்போதைய மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் நிலையில், புதிய எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதனால், சக்திவாய்ந்த பெட்ரோல் மாடலாக மேம்பட்டிருக்கிறது. கியர்பாக்ஸ் ஆப்ஷன் தற்போதைய மாடலில் இருக்கும் அதே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்தான் தொடர்கிறது. இந்தியாவில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
கிரவுண்ட் கிளியரன்ஸ் தற்போதைய மாருதி எர்டிகா கார் 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கும் நிலையில், புதிய மாருதி எர்டிகா காரின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 5 மிமீ குறைக்கப்பட்டு 180 மிமீ ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், டர்னிங் ரேடியஸ் 5.2 மீட்டர் என்ற அளவிலேயே தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. வெற்றிகரமான மாடல் 2011ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எர்டிகா கார் இதுவரை 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.
சென்னை : தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024) அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வுப்…
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…
சார்ஜா : வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில்…
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக…
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830…