பறக்கும்படை அமைத்து அதிக புகையை வெளிவிடும் வாகனங்கள் பறிமுதல்!
உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதிக புகையை வெளிவிடும் வாகனங்களை பறிமுதல் செய்ய பறக்கும்படைகளை அமைக்கக்கோரிய வழக்கில் போக்குவரத்து துறைக்கான கூடுதல் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களை திரவ எரிபொருளிலிருந்து, வாயு எரிபொருளுக்கு மாற்றி புகையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், உச்சநீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இந்தியாவில் 25 லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், வாகனப் புகை வெளியேறுவது தொடர்ந்தால், தமிழகம் சுடுகாடாக மாறும்நிலை உருவாகும் என்றும் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்து துறை கூடுதல் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.