இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி சேவையை வழங்குகிறது. இந்த கார் கேண்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் நிறங்களில் வருகிறது.
இந்த கார் குறித்து அதன் விற்பனை மற்றும் சேவைப் பிரிவு இயக்குநர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில், இந்த கார் தனது பிராண்டின் தரத்தை நிலைநிறுத்தும் வகையிலான டிசைன், உள்கட்டமைப்பு மற்றும் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. மேலும் இந்த கார் மிக குறைந்த விலையில் வருகிறது.
புதிய ரேபிட் மாடலில் சிறப்பு அம்சமாக டூயல் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரையில் வெளிவந்த ஸ்கோடா தயாரிப்புகளிலேயே அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் ரேபிட் ரைடர் உள்ளது. இதனுடன், பார்க்கிங் சென்சார், க்ளேர் அடிக்காத பக்கவாட்டுக் கண்ணாடி, டைமர் உடனான விண்ட்ஷீல்டு, உயரத்துக்கு ஏற்ப மாற்றப்படக் கூடிய சீட் பெல்ட் என அசத்துகிறது ஸ்கோடா ரேபிட்.
1.6 லிட்டர் மல்டி-பாயிண்ட் பெட்ரோல் பவர் என்ஜின் கொண்ட ஸ்கோடா ரேபிட் ரைடரின் திறன் 153Nm டாக் வெளியீட்டுடன் லிட்டருக்கு 15.41 கி.மீ மைலேஜ் தருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி, 4 ஆண்டுக்கான சாலையோர உதவி மற்றும் 4 ஆண்டுக்கான பராமரிப்பு சேவையை வழங்குகிறது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…