செம…இந்த விலையில் இப்படி ஒரு “எலெக்ட்ரிக் காரா”.? எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி!!

Published by
பால முருகன்

மக்கள் பலரும் கார்களை குறைந்த விலையில் வாங்கவேண்டும் என்று விரும்புவது உண்டு. அதிலும் குறிப்பாக  அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாலும், சுற்றுசூழல் மாசுபடுவதன்  காரணமாக  எலெக்ட்ரிக் கார்  வாங்க விரும்புகிறார்கள். ஆனால், அப்படி விரும்பி கார்பிரியர்களுக்கு குறைந்த விலையில் நல்ல கார்கள் கிடைப்பதில்லை.

இந்நிலையில், அவர்களுக்காகவே எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கொமெட் EV மாடல் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த புதிய எம்ஜி கொமெட் EV மாடல் விலை ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த EV மாடலில் உள்ள எலெக்ட்ரிக் கார்  17.3 கிலோவாட் ஹவர் பேட்டரியை கொண்டுள்ளது. எனவே,  முழு சார்ஜ் செய்தால் போதும் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.  மேலும், இந்த காரின்  பேட்டரியை 3.3 கிலோவாட் யூனிட் மூலம் சார்ஜ் செய்யும் போது கிட்டத்தட்ட 7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.  மேலும்  5 மணி நேரங்களில், 10 முதல் 80 % சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, மலிவான விலையில் கார் வாங்கவேண்டும் என்றால் அவர்களுக்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எம்ஜி கொமெட் EV மாடலின் டெஸ்ட் டிரைவ் ஏப்ரல் 27 (நாளை)   துவங்க இருக்கிறது. வினியோகம் மே 15 ஆம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

12 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

13 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

13 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

14 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

14 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

15 hours ago