வீல் பேலன்ஸிங், வீல் அலைன்மெண்ட் பற்றிய ருசீகர தகவல்கள்..!!

Default Image

 

கார் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கேள்வி என்ற என்றால் வீல் பேலன்ஸிங் மற்றும் வீல் அலைன்மெண்ட் என்பதுதான்.

வீல் பேலண்ஸிங் என்பது ஒரு வீலில் ஒரு புறம் வெயிட் அதிகமாக இருக்கும் இன்னொருபுறம் குறைவாக இருக்கும் இதை சரி செய்வது தான் வீல் பேலன்ஸிங்

வீல் அலைன்மெண்ட் என்பது காரில்உள்ள நான்கு வீல்களும் உள்ள போசிஷன் மற்றும் அது ரோட்டுடன் வீல்இருக்கும் போஷினை சரி செய்வது தான்.

வீல் பேலன்ஸிங் நம் காரின் வீல் உள்ள வெயிட்டை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக கொண்டு வருவது தான் வீல் பேலன்ஸிங். சில கார்கள் வீல் சுற்றும் போது ஒரு புறம் மேடாகவும் ஒருபுறம் பள்ளமாகவும் சுற்றுவதை பார்த்திருப்பீர்கள். அந்த வில் சரியான பேலன்ஸ் செய்யாமல் இருக்கிறது என அர்த்தம்.

இந்த பிரச்னையை ரிம்மில் தான் சரி செய்ய வேண்டும் அதாவது வீலை சுத்த விட்டு வீலில் எந்த இடத்தில் வெயிட் அதிகமாக இருக்கிறது. எந்த இடத்தில் குறைவாக இருக்கிறது என பார்த்து குறைவாக உள்ள இடத்தில் அதிகமாக வெயிட் உள்ள இடத்திற்கு தகுந்தார் போல வெயிட்டை அதிகரிக்க வேண்டும்.

உங்கள் காரின் வீல்கள் சரியான பேலன்ஸில் இல்லை என்றால் உங்கள் காரின் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. பேலன்ஸ் இல்லாத வீல் சுற்றும் போது அதிக சிரத்தை எடுப்பதால் அதிகம் பெட்ரோல் செலவாகும்.

வீல் அலைன்மெண்ட் என்பது வீல் பேலன்ஸிங்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது காரில் உள்ள நான்கு வீல்களும் பொருத்தப்பட்டுள்ள விதம், அதன் ஆங்கிள், ஆகியவற்றை சரி செய்வது தான் வீல் அலைன்மெண்ட் நீங்கள் காரில் செல்லும் போது காரின் ஒரு வீல் மட்டும் சில நேரங்களில் குழியில் ஏறி இறங்கும் போது அதன் அந்தவீலின் ஆங்கிள்கள் போசிஷன்கள் மாறும் இதை நாம் அவ்வப்போது சரி செய்ய வேண்டும்.

கார் வீலின் ஆங்கிள் மாறினால் டயர் முழுமையாக ரோட்டில் படாமல் குறிப்பிட்ட பகுதிமட்டுமே படும் அப்படி நாம் தொடர்ந்து ஓட்டி வந்தால் வீலின் ரோட்டில் படும் வீல் அதிக பாரத்தை தாங்கி அந்த பகுதி மட்டும் விரைவில் தேய்மானமாகும். வீலின் போசிஷன்கள் மாறினால் கார் ஒரே நேர் கோட்டில் செல்லாமல் ஒரு பக்கமாக ஒதுங்கிசெல்லும் அடிக்கடி நாம் ரோட்டிற்கு காரை திருப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வீல் அலைன்மெண்ட் என்பது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று 2 வீல் அலைன்மெண்ட், இரண்டாவது 4 வீல் என உள்ளது. 2 வீல் என்பது முன்பக்க வீல்களை மட்டும் அலைன் செய்யும், 4 வீல் அலைன்மெண்ட் என்பது நான்கு வீல்களையும் அலைன் செய்யக்கூடியது.

நீங்கள் 4 வீல் அலைன்மெண்ட்களையே தேர்வு செய்வது நல்லது. இந்த வீல் அலைன்மெண்ட் என்பது உள்ள காரின் ஸ்டியரிங் போஷினை கணக்கிட்டும் அலைன் செய்கிறது என்பதால் இது மிக துள்ளியமாக இருக்கும். கார் வீல்களை பேலன்ஸ் மற்றும் அலைன் செய்த பின்பு காரை ஓட்டும் போது உங்களுக்கே அதற்கான மாற்றம் தெரியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்