புல்லட்டுக்களை திரும்பப் பெறும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்..!!

Published by
kavitha

7000 ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்களை ரிகால் செய்வதாகவும் அதனை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகில் தற்போது இளம் தலைமுறையினரிடம் இந்த வகை புல்லட்டுகள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றது.இந்நிலையில் இந்த வகை புல்லட்டுகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தில் பழுது கண்டறியப்பட்டதால்  அதனை  ரிகால் செய்வதாக அதன் சொந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Related image

தமிழகத்தில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற இந்த வகை புல்லட் நிறுவனம் அதனை அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது. இதில் மார்ச் மாதம் 20 முதல் 30 வரையிலான காலககட்டத்தில் தயாரிக்கப்பட்ட பைக்குகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் தான் இந்த ரிகால் அறிவிப்பை அறிவித்துள்ளது.

அதில் 7,000  புல்லட் மற்றும் எலக்ட்ரா வகை பைக்குகளை  திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.மேலும் இது குறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்திக் குறிப்பில் இதன் உதிரி பாகங்களை விநியோகிக்கும் நிறுவனம் கடந்த  மார்ச்  முதல் ஏப்ரல் காலத்தில் சப்ளை செய்து வந்த  பிரேக் கேலிபர் போல்டுகளின் உள்ள டார்க் விசையானது அதில் குறிப்பிட்ட அளவீடுகளின்படி இல்லை என்று தெரிய வந்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட நிறுவனம்  பைக் தரம் விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்ற கொள்கையின் படி பைக்குகளில் ஏற்பட்ட இந்த பழுதினை சரிசெய்து தரும் வகையில் தான்  இந்த ரீகால் அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அதில்  கூறப்பட்டுள்ளது.

அதன் படி இந்த பைக்குகளை வாங்கிய  வாடிக்கையாளர்களுக்கு ஷோரூம்கள் வாயிலாக  தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாகவே இந்த கோளாறுகளை சரிசெய்து தரப்படும் என்று ராயல் என்ஃபீல்டு கூறியுள்ளது.

 

 

Published by
kavitha

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

4 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

5 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

6 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

7 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

8 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

9 hours ago