புல்லட்டுக்களை திரும்பப் பெறும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்..!!
7000 ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்களை ரிகால் செய்வதாகவும் அதனை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகில் தற்போது இளம் தலைமுறையினரிடம் இந்த வகை புல்லட்டுகள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றது.இந்நிலையில் இந்த வகை புல்லட்டுகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தில் பழுது கண்டறியப்பட்டதால் அதனை ரிகால் செய்வதாக அதன் சொந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற இந்த வகை புல்லட் நிறுவனம் அதனை அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது. இதில் மார்ச் மாதம் 20 முதல் 30 வரையிலான காலககட்டத்தில் தயாரிக்கப்பட்ட பைக்குகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் தான் இந்த ரிகால் அறிவிப்பை அறிவித்துள்ளது.
அதில் 7,000 புல்லட் மற்றும் எலக்ட்ரா வகை பைக்குகளை திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.மேலும் இது குறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்திக் குறிப்பில் இதன் உதிரி பாகங்களை விநியோகிக்கும் நிறுவனம் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் காலத்தில் சப்ளை செய்து வந்த பிரேக் கேலிபர் போல்டுகளின் உள்ள டார்க் விசையானது அதில் குறிப்பிட்ட அளவீடுகளின்படி இல்லை என்று தெரிய வந்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட நிறுவனம் பைக் தரம் விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்ற கொள்கையின் படி பைக்குகளில் ஏற்பட்ட இந்த பழுதினை சரிசெய்து தரும் வகையில் தான் இந்த ரீகால் அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதன் படி இந்த பைக்குகளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஷோரூம்கள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாகவே இந்த கோளாறுகளை சரிசெய்து தரப்படும் என்று ராயல் என்ஃபீல்டு கூறியுள்ளது.