ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 கன்மெட்டல் எடிசன் புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 125சிசி பைக்குகள் அனைத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருக்க அரசு உதத்தரவிட்ட காரணத்தால் இந்த மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிய பிரேக்கிங் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.
அண்மையில் வெளியான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலில் முதன் முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகபடுத்தப்பட்டது. அதன் பிறகு இனி அறிமுகபடுத்தும் அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த வாகனத்தில் இரு சக்கரத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிளாசிக் 350 கன் மெட்டல் கிரே எடிசனில் முன்சக்கரத்தில் டியூவல் பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.
இந்த மாடலுக்கு ஆன்ரோடு விலையாக 1.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் மாடலானது மற்ற மாடலை விட 10,000ரூ அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன் மெட்டல் கிரே எடிசன் மாடலில் இருக்கும் 346சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…