மின்சார வாகன உலகில் களமிறங்கும் ராயல் என்பீல்டு..! வெளியான அசத்தல் அப்டேட்..!

ராயல் என்பீல்டு நிறுவனம் தனித்தன்மை வாய்ந்த மின்சார பைக்குகளை வெளியிட உள்ளது.
இளைஞர்கள் கனவு:
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பலரும் பைக் என்று சொன்னாலே உற்சாகம் அடைந்து விடுவார்கள். அதிலும் ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வது இளைஞர் பலரின் கனவாக உள்ளது. அதில் பயணம் அனுபவம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
தற்பொழுது, உலகெங்கும் மின்சார வாகனங்கள் மயமாகி வருவதால் பல இரு சக்கர வாகன நிறுவனங்கள் தற்போது மின் வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில் நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவனம் தனித்தன்மையுடன் வித்தியாசமான மின்சார மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே தயாரிப்பு மேம்பாட்டிற்காக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. சென்னையை தளமாகக் கொண்ட தயாரிப்பு ஆலையைச் சுற்றி வாகனங்களின் சப்ளையர்/டீலர்களின் ஒரு அமைப்பை நிறுவனம் உருவாக்கி வருவதாக தலைமை நிர்வாக அதிகாரி பி.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சார வாகன உலகில் நாங்கள் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறோம். ராயல் என்பீல்டின் இவி (EV) பயணம் இப்போது டாப் கியரில் உள்ளது என்று என்னால் சொல்ல முடியும். வலுவான ராயல் என்ஃபீல்டு மூலம் தனித்துவமாக வேறுபடுத்தப்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன ஆலை அமைக்க திட்டமிட்டு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 60 அடி நிலப்பரப்பில் ராயல் என்பீல்டு எலக்ட்ரிக் ஆலை அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.