ராயல் என்பீல்டு (Royal Enfield) மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரிப்பு.!

Default Image

உலகின் 250சிசி முதல் 500சிசி வரையிலான சந்தையில் ஆடம்பரம் , வசீகரம் மற்றும் கிளாசிக் பாரம்பரியத்தை பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 பிப்ரவரி மாத விற்பனையில் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு  மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 பிப்ரவரி மாத முடிவில் 58,439 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் சுமார் 73,077 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய விற்பனை உடன் ஒப்பீடுகையில் 25 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் உள்நாட்டு விற்பனை தவிர ஏற்றுமதி சந்தையில் ஒரு சதவீத வளர்ச்சியை என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2018 முடிவில் 1723 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1,702 வாகனங்களை  ஏற்றுமதி செய்திருந்தது.

சமீபத்தில் புதிய தண்டர்பேர்ட் X வரிசை மாடலில்  தண்டர்பேர்ட் 350X ,  தண்டர்பேர்ட் 500X ஆகிய இரு மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக அலாய் வீல் மற்றும் ட்யூப்லெஸ் டயர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Royal Enfield sales incresed 25%

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்