தரமான அப்டேட்களுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் அந்த 4 பைக்குகள்.!
2022இல் ராயல் என்ஃபீல்டு புதியதாக 4 மாடல்களை களமிறக்க உள்ளது. அந்த புதிய மாடல் பைக்குகளை பற்றி இந்த பதிவில் சற்று சுருக்கமாக காணலாம்.
தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் கிளாசிக் பைக் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். கிளாசிக் பைக் ஒன்று வைத்து கொண்டு அதில் சென்றாலே ஒரு கெத்து எனும் ஃபீலிங் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது.
இந்த நிலைமையை புரிந்து கொண்டு கிட்டத்தட்ட அனைத்து பெரிய பைக் நிறுவனங்களும் தங்களின் கிளாசிக் வாகனங்களை சந்தையில் களமிறக்கி வருகின்றன.
ஆனால், யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான் என்பது போல, கிளாசிக் பைக் என்றாலே ராயல் என்பீல்டு தான் என அனைவரது மத்தியிலும் பதிந்து விட்டது. தற்போது தான் நீண்ட காலமாக காத்திருந்த ஜாவா தனது இடத்தை பிடிக்க ராயல் என்பீல்டு உடன் கடுமையான போட்டியில் உள்ளது.
ஆனால், ராயல் என்பீல்டு தனது புதிய மாடல்களை ஒவ்வொன்றாக களமிறக்கி மோட்டார் சந்தையை கலங்கடித்து வருகிறது. அப்படி, அடுத்த வருடன் 2022இல் 4 புதிய பைக்குகள் கிளாசிக் மோட்டார் சந்தையில் களமிறங்க உள்ளன.
அதில் முதலாவது. ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 ( Royal Enfield Scram 411 ). இதில், ஹிமாலயன் மாடலில் இந்த பைக் களமிறங்க உள்ளது. ஹிமாலயனில் பயன்படுத்தப்படும் 411சிசி எஞ்சின் தான் இதிலும் பயன்படுத்தப்பட உள்ளது. 24.31 பிஎஸ் பவரும், 32nm டார்க்கும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது இந்த பைக்.
அடுத்து, ராயல் என்ஃபீல்டு குருஸியர் 650சிசி ( Royal Enfield Crusier 650 ). இந்த பைக்கில் இன்டெர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650சிசி எஞ்சின் இதில் பயன்படுத்தப்பட உள்ளது. 47.65 BS பவரையும், 52nm டார்க்கும் இதில் வெளிப்படும் என கூறப்படுகிறது.
அடுத்ததாக ராயல் என்ஃபீல்டு ரோடுஸ்டெர் 650சிசி ( Royal Enfield Roadster 650 ) இதிலும் கான்டினென்டல் ஜிடி 650 எஞ்சின் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதனை விட அதிக பிரீமியம் வசதி கொண்டதாக இந்த மாடல் ராயல் என்ஃபீல்டு பைக் உருவாக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக களமிறங்கும் பைக் ராயல் என்ஃபீல்டு ஹண்டர். இந்த பைக் தான் 2022இல் அதிகம் விற்பனையாக காத்திருக்கும் கிளாசிக் பைக் என கூறப்படுகிறது. ஏனென்றால், ராயல் என்ஃபீல்டு அதிகமாக விறபனையாகும் கிளாசிக் 350 எஞ்சின் தான் இதில் பயன்படுத்தப்படுகிறது. 349சிசி எஞ்சின் இதில் பயன்படுத்தப்படுகிறது. கிளாசிக் 350-ஐ பல்வேறு மாற்றங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். அதனால், 2022இல் கிளாசிக் பைக் சந்தையில் இந்த மாடல் நல்ல விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.