Royal Enfield : கைவண்ணம் பூசிய மிலிட்டரி புல்லட் 350.! ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு விலை…

Royal Enfield Bullet 350

இருசக்கர வாகன உலகில் ஒவ்வொரு நாளும் புது புது அம்சங்களோடு புத்தம் புது வாகனங்கள் சந்தையில் களமிறங்கினாலும், அதில் குறிப்பிட்ட வாகனங்களில் பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கும். அதும் அந்த வாகனத்தின் தரம், வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை பொறுத்தே அதன் ஆயுட்காலம் இருக்கும்.

முதலாளியின் 100வது பிறந்தநாளுக்கு Hero கொடுத்த ‘ஷாக்’ சர்ப்ரைஸ்.! Hero CE001 ‘100’ மட்டுமே..!

நவீன வசதிகளை கொண்டு எத்தனை புது மாடல் பைக் வந்தாலும்,  ராயல் என்பீல்டு எனும் நிறுவனம் வெளியிடும் பைக்கிற்கு இன்னும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒரு எதிர்பார்ப்பு இன்னும் நிலவுகிறது என்பது ஆச்சர்யமூட்டும் உண்மை. அதிலும் பழைய மாடல் ரக வடிவமைப்பில் தற்போது புதிய அம்சங்களை சிலவற்றை மட்டும் சேர்த்து இன்னும் இருசக்கர வாகன உலகில் கோலோச்சி வருகிறது ராயல் என்பீல்டு ரக பைக்குகள்.

இந்த பைக்குகளில் மிக விருப்பமான கம்பீரமான மாடலாக பார்க்கப்படும் மிலிட்டரி புல்லட் 350. இந்த ரக பைக்கின் தற்போது கைவண்ணம் பூசிய வேரியண்ட் ரக பைக் விலை பட்டியல் வெளியாகியுள்ளது. அதாவது இயந்திரம் மூலம் வாகனத்திற்கு வண்ணப்பூச்சி பூசாமல், கைதேர்ந்த வல்லுநர்கள் கொண்டு கைகளால் வண்ணப்பூச்சு பூசிய வாகனங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விலை பட்டியல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில்,  ராயல் என்ஃபீல்டு புல்லட் 350யானது, மிலிட்டரி சில்வர் பிளாக் மற்றும் மிலிட்டரி சில்வர் ரெட் வகைகளுடன் வெள்ளியில் கை வண்ணம் பூசி தற்போது புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.1,79,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . அதுபோல மற்ற கலர் வகைகளின் விலை பட்டியலை கீழே காணலாம்.

  • புல்லட் மிலிட்டரி பிளாக் – ரூ.1,73,562
  • புல்லட் மிலிட்டரி ரெட் – ரூ.1,73,562
  • புல்லட் மிலிட்டரி சில்வர் பிளாக் – ரூ 1,79,000 (புதிய அறிமுகம் )
  • புல்லட் மிலிட்டரி சில்வர் ரெட் – ரூ 1,79,000 (புதிய அறிமுகம்)
  • புல்லட் ஸ்டாண்டர்ட் மெரூன் – ரூ.1,97,436
  • புல்லட் ஸ்டாண்டர்ட் பிளாக் – ரூ.1,97,436
  • புல்லட் கருப்பு தங்கம் – ரூ.2,15,801

சிறப்பம்சங்கள் : 

முன்புறம் ஒற்றை-சேனல் ஏபிஎஸ் மற்றும் பின்புற டிரம் பிரேக் வசதியை கொண்டுள்ளது. புல்லட் பிளாக் கோல்டு மேட் மற்றும் க்ளோஸ் பிளாக் டேங்க், காப்பர் மற்றும் 3டி ரக கோல்டு வண்ண ராயல் என்பீல்டு பேட்ஜ், பிளாக்-அவுட் எஞ்சின் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உள்ளிட்ட மற்ற பாகங்களின் வண்ணங்கள் வழக்கமான முறைப்படி அப்படியே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்