கேடிஎம் 390 டியூக்கை அலறவிட வரும் ராயல் என்ஃபீல்டு.! ஹண்டர் 450 சிறப்பம்சம்…

Published by
கெளதம்

கேடிஎம் 390 டியூக் மற்றும் வரவிருக்கும் பஜாஜ்-ட்ரையம்ப் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 பைக்கின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில், ஹிமாலயன் 450 உற்பத்திக்கு தயாராக இருப்பதால், அநேகமாக, ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு பல்வேறு எஞ்சின் உள்ளமைப்பு அடிப்படையில் சில மாடல்களை தயார் செய்து வருகிறது. அவற்றில் ஒன்று லிக்விட்-கூல்டு, 450சிசி ரோட்ஸ்டர், இது ஹிமாலயன் 450 உடன் ஒத்து போகும்.

வரவிருக்கும், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 இதற்கு முன் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டது. வெளிநாட்டில் ஒருமுறை, மற்றும் இந்தியாவில் ஒருமுறை சோதனை செய்யப்பட்டுள்ளதாம்.

ஹண்டர் 450 ஆனது மலிவு விலையில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும், இதன் விலை ரூ. 2.6 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

 ஹண்டர் 450 சிறப்பம்சம்:

  • இந்த பைக்கில் லிக்யூடு கூல்டு என்ஜின் இடம்பெற்றிருப்பதனால் மிக சக்திவாய்ந்த என்ஜின் ஆக இருக்கும்.
  • 17-இன்ச் அலாய் வீல்கள், இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப் ஆகியவை அடங்குகிறது.
  • இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்த பைக்கில் அதிகபட்சமாக 40 hp பவரை வெளிப்படுத்தலாம்.
  • லிக்விட்-கூல்டு, 450சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
  • நேக்கட் ரோட்ஸ்டரில் வட்ட வடிவ அனைத்து டிஜிட்டல் கருவி கன்சோல் இடம்பெறும்.
  • டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டத்துடன், 450 சிசி வரம்பிற்கு தனித்துவமான புதிய சுவிட்ச் கியர் மற்றும் பரந்த ஹேண்டில்பார் அமைப்பு.
Published by
கெளதம்

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

12 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

13 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

13 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

14 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

15 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

15 hours ago