கேடிஎம் 390 டியூக்கை அலறவிட வரும் ராயல் என்ஃபீல்டு.! ஹண்டர் 450 சிறப்பம்சம்…
கேடிஎம் 390 டியூக் மற்றும் வரவிருக்கும் பஜாஜ்-ட்ரையம்ப் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 பைக்கின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
அந்த வகையில், ஹிமாலயன் 450 உற்பத்திக்கு தயாராக இருப்பதால், அநேகமாக, ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு பல்வேறு எஞ்சின் உள்ளமைப்பு அடிப்படையில் சில மாடல்களை தயார் செய்து வருகிறது. அவற்றில் ஒன்று லிக்விட்-கூல்டு, 450சிசி ரோட்ஸ்டர், இது ஹிமாலயன் 450 உடன் ஒத்து போகும்.
வரவிருக்கும், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 இதற்கு முன் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டது. வெளிநாட்டில் ஒருமுறை, மற்றும் இந்தியாவில் ஒருமுறை சோதனை செய்யப்பட்டுள்ளதாம்.
ஹண்டர் 450 ஆனது மலிவு விலையில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும், இதன் விலை ரூ. 2.6 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.
ஹண்டர் 450 சிறப்பம்சம்:
- இந்த பைக்கில் லிக்யூடு கூல்டு என்ஜின் இடம்பெற்றிருப்பதனால் மிக சக்திவாய்ந்த என்ஜின் ஆக இருக்கும்.
- 17-இன்ச் அலாய் வீல்கள், இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப் ஆகியவை அடங்குகிறது.
- இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- இந்த பைக்கில் அதிகபட்சமாக 40 hp பவரை வெளிப்படுத்தலாம்.
- லிக்விட்-கூல்டு, 450சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
- நேக்கட் ரோட்ஸ்டரில் வட்ட வடிவ அனைத்து டிஜிட்டல் கருவி கன்சோல் இடம்பெறும்.
- டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டத்துடன், 450 சிசி வரம்பிற்கு தனித்துவமான புதிய சுவிட்ச் கியர் மற்றும் பரந்த ஹேண்டில்பார் அமைப்பு.