ராயல் தோரனையில் ரோட்டில் செல்ல வருகிறது….!!!! புதிய ரக என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்…!!!!
ராயல் என்ஃபீல்டு ரக இருசக்கர வாகனங்கள் புதிய வடிவத்தில் புதிய வசதிகளுடன் இந்தியாவில் புதிதாக அறிமுகமாக உள்ளனர்.இதில் ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ரக இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் தற்போது வெளியிடப்பட்டது. இந்த புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எசின் விலை ரூ.2.13 லட்சம் [இந்த விலை டெல்லியில் உள்ள எக்ஸ்-ஷோரூம் நிலவரப்படி] என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இது இந்தியாவின் அனைத்து ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களிலும் தற்போது முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வாகனம் புதிய ஃபேக்ட்ரி-கஸ்டம் வெர்ஷன் ஸ்டான்டர்டு மாடலை போலவே உருவாக்கப்பட்டுள்ளது.இதேபோல்,இந்த புதிய மாடலின் ஃபியூயல் டேன்க், ஹேன்டில் பார், அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டையர் உள்ளிட்டவற்றில் பிராகசமான நிறங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். மாடலின் விலையை வைத்து பார்க்கும் போது, தன்டர்பேர்டு 500 எக்ஸ் அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த சிங்கிள்-சிலிண்டர் மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.
ஏ.பி.எஸ். பாதுகாப்பு வசதி தவிர, புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மோட்டார்சைக்கிளிலும் 499சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 41 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள்,
இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் உள்ளது.இது இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாதம் துவங்கி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில், அந்நிறுவனம் கிளாசிக் 350 சிக்னல்ஸ், கிளாசிக் 500, ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், தன்டர்பேர்டு 350 எக்ஸ் உள்ளிட்டவற்றில் ஏ.பி.எஸ். வசதியை வழங்கி வருகிறது.இதனால் இருசக்கர வாகன பிரியர்கள் ஆனந்தத்தின் உச்சியில் உள்ளனர்.
DINASUVADU.