பல்சர் பைக் என்றால் தற்போதும் இளைஞர்கள் மத்தியில் ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதன் பிரதிபலிப்பு அந்த பைக்குகள் விற்பனையில் அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் எப்போதும் ராஜாவாக திகழும் பல்சர் 150 மற்றும் புதிதாக களமிறங்கிய பல்சர் 220 மாடல்களுக்கு மார்க்கெட்டில் விற்பனை உயர்ந்துள்ளது.
கடந்த 2020 டிசம்பர் மாதம் மற்றும் 2021 நவம்பர் ஆகிய மாதங்களில் முறையே 19,958 மற்றும் 13,084 பல்சர் 150 ரக பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 டிசம்பர் மாதத்தில் இவற்றை காட்டிலும் முறையே 36.13% மற்றும் 107.65% அதிகமாக 27,169 பல்சர் 150 ரக பைக்குகள் விற்பனை ஆகியுள்ளன. இதனுடே கணிசமான எண்ணிக்கையில் பல்சர் 125 ரக பைக்குகளும் விற்பனையாகியுள்ளன.
அதேபோல, பல்சர் 220 எஃப்/ 250 ரக பைக்குகள் கடந்த 2021 நவம்பரில் 644 ஆக இருந்த எண்ணிக்கை ஒரேடியாக 300சதவீதம் எகிறி கடந்த 2021 டிசம்பரில் மட்டுமே 2,621 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.
மார்க்கெட்டில் எத்தனை புது பைக்குகள் களமிறங்கினாலும் தான் என்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் கிங் என நிரூபித்து வருகிறது இந்த கணிசமான உயர்வு.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…