இளைஞர்களின் ஆல்டைம் பேவரைட் RX100 மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்கும் என யமஹா சேர்மன் கூறியுள்ளார். 1985 ஆம் ஆண்டு யமஹா நிறுவனம் தனது RX100 ரக ஜாம்பவானை இந்திய சந்தையில் களமிறக்கியது. அதன் வேகத்துக்கு தற்போதுள்ள சூப்பர் பைக்குகளே திணறும். அப்படி இருக்கையில் அந்த காலத்தில் சொல்லவா வேண்டும். இதனை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏராளம். இளைஞர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தாலும், தனது RX100 பைக் உற்பத்தியை 1996ஆம் ஆண்டே நிறுத்தி […]
சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை நாம் செய்திகளில் படித்து வருகிறோம். மேலும்,எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்கத் தவறினால்,சம்மந்தப்பட நிறுவனங்களுக்கு “கடுமையான அபராதம்” விதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட் S1 ப்ரோ எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.மேலும், புனேவில் மார்ச் 26 அன்று நடந்த ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர […]
கூகுள் நிறுவனம் தற்போது உருவாகியுள்ள புதிய விதிகளின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துபவர்கள் இனி தங்கள் போன்களில் உள்ள ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக தங்களுக்கு வரக்கூடிய மற்றும் தாங்கள் அழைக்கக்கூடிய கால்களில் ரெக்கார்டு செய்ய முடியாதபடி வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பலர் தங்களது மொபைல்களில் கூகுள் ப்ளே மூலமாக கால் ரெக்கார்ட் அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து, அதன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்து வந்தனர். இதன் மூலம் பயனாளர்களின் பிரைவசி மற்றும் டேட்டா ஆகியவை கேள்விக் குறியாக […]
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி,தனது அனைத்து கார்களின் விலையை மாடல்களை பொருத்து 0.9 சதவீதம் முதல் 1.9 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது ஆல்டோ முதல் எஸ்-கிராஸ் வரையிலான பல்வேறு கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம்,பல்வேறு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்,இந்த புதிய விலை உயர்வு நேற்று (18 ஏப்ரல்) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே,கடந்த ஏப்ரல் 6 அன்று,மாருதி சுசுகி நிறுவனம் கூறுகையில்: “கடந்த […]
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மூலம் 2020-2022 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட Ford Escape மற்றும் 2021-2022 கண்டறியப்பட்ட Ford Bronco Sport ஆகிய வாகனங்களை திரும்ப பெற போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், 1.5 லிட்டர் எஞ்சின்களை கொண்ட 345,451 வாகனங்களை திரும்ப பெற போவதாகவும், இந்த வாகனங்களின் எஞ்சின் பகுதியில் விரிசல் மற்றும் தீயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் கசிவு உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. […]
சுசுகி மோட்டார் மற்றும் பறக்கும் கார் நிறுவனமான(ஸ்கைட்ரைவ்) SkyDrive ஆகியவை இணைந்து பறக்கும் கார்களை ஆராய்ச்சி செய்து, தயாரித்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதிலும் அவற்றின் முதல் இலக்கும் இந்திய வாகனச் சந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் கார் நிறுவனமான (ஸ்கைட்ரைவ்) SkyDrive தற்போது ஒரு சிறிய, இரண்டு இருக்கைகள் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை முழுமையாக தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த மாடலில் சுசுகி நிறுவனத்துடன் […]
பல்சர் பைக் என்றால் தற்போதும் இளைஞர்கள் மத்தியில் ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதன் பிரதிபலிப்பு அந்த பைக்குகள் விற்பனையில் அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் எப்போதும் ராஜாவாக திகழும் பல்சர் 150 மற்றும் புதிதாக களமிறங்கிய பல்சர் 220 மாடல்களுக்கு மார்க்கெட்டில் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த 2020 டிசம்பர் மாதம் மற்றும் 2021 நவம்பர் ஆகிய மாதங்களில் முறையே 19,958 மற்றும் 13,084 பல்சர் 150 ரக பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 டிசம்பர் மாதத்தில் […]
ஓலா எலெக்ட்ரிக் பைக்குகளை சார்ஜ் செய்வதற்காக பிரத்யோகமாக இந்தியா முழுவதும் 4000 ஹைப்பர் சார்ஜ் ஏற்றும் இடங்கள் அமைக்கப்பட உள்ளதாம். அங்கு அடுத்த ஆண்டு ஜூலை வரையில் கட்டமில்லாமல் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாமாம். ஓலா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி அதனை தற்போது முன்பதிவு செய்தவர்களுக்கு வாகனங்களை டெலிவரி செய்யும் வேளைகளில் ஓலா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது விற்பனையை அதிகப்படுத்த ஹைப்பர்சார்ஜிங் பாய்ண்ட்களை இந்தியா முழுவதும் அமைக்க உள்ளதாம் அந்நிறுவனம். இதனை […]
2022இல் ராயல் என்ஃபீல்டு புதியதாக 4 மாடல்களை களமிறக்க உள்ளது. அந்த புதிய மாடல் பைக்குகளை பற்றி இந்த பதிவில் சற்று சுருக்கமாக காணலாம். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் கிளாசிக் பைக் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். கிளாசிக் பைக் ஒன்று வைத்து கொண்டு அதில் சென்றாலே ஒரு கெத்து எனும் ஃபீலிங் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலைமையை புரிந்து கொண்டு கிட்டத்தட்ட அனைத்து பெரிய […]
பேட்டரி இல்லாமல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வசதியை பவுன்ஸ் இன்பினிட்டி என்ற இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம் அதை சாத்தியமாக்கவுள்ளது. இந்தியாவில் உள்ள பவுன்ஸ் இன்பினிட்டி என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. இன்பினிட்டிஆனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது ‘மேட் இன் இந்தியா’ என்றும், ‘மேம்படுத்தப்பட்ட அதிநவீன உபகரணங்கள் மற்றும் அறிவார்ந்த அம்சங்களுடன்’ வருகிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்திய சந்தையில் […]
கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக் (FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 முதல் இந்தியா முழுவதும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணத்தை வசூலிக்கின்றன.ஃபாஸ்டேக் அமலாக்கம் தேசிய நெடுஞ்சாலைகளில் காத்திருப்பு நேரத்தை கணிசமாகக் குறைத்து வெளிப்படைத் தன்மையையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக்(FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது என்று பிடிஐ […]
உலகின் முதல் பறக்கும் பைக் மாடலை அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில்,பறக்கும் பைக்குகளை ஜப்பானை தளமாகக் கொண்ட அலி (ALI Tech) டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது.அந்த வகையில்,உலகின் முதல் பறக்கும் பிராக்டிகல் ஹோவர் பைக் மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது .அதன் பெயர் எக்ஸ்டுரிஸ்மோ என்று அழைக்கப்படுகிறது.மேலும்,அதன் இயக்கம் குறித்து நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அலி டெக்னாலஜிஸ் நிறுவனம்,அக்டோபர் 26 […]
கார்களை வாங்குவது,விற்பது தொடர்பான வாகன வர்த்தக தளத்தில் ஓலா நிறுவனம் களமிறங்கியுள்ளது. பிரபல வாடகை கார் நிறுவனமான ஓலா,மின்சார வாகனத்துறையில் முதலீடு செய்து,ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வருகிறது.இந்த நிலையில்,தற்போது வாகன வர்த்தக தளத்தில் களம் இறங்கியிருக்கிறது. ‘ஓலா கார்ஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வாகன வர்த்தக தளம் மூலமாக புதிய கார்கள் மற்றும் பழைய கார்கள் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,வாகன நிதி மற்றும் காப்பீடு, பதிவு, வாகன […]
ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத், தமிழ்நாடு யூனிட்களை வாங்க டாட்டா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம், அமெரிக்க கார் நிறுவனமான போர்டு இந்தியாவில் கார்களை தயாரிப்பதை நிறுத்தி,குஜராத் மற்றும் தமிழகத்தில் உள்ள தனது இரண்டு ஆலைகளையும் மூடுவதாக அறிவித்திருந்தது.இதனால்,ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால்,சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் கலந்துரையாடி வருகிறது. அந்த வகையில்,டாட்டா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
15 நிமிடங்களில் மின்சார காரை முழுமையாக சார்ஜ் செய்யும் உலகின் அதிவேக இ-கார் சார்ஜரை ஏபிபி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக மின்சார வாகனத்தை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் தொடங்கி 9 மணி நேரம் வரை செலவிட வேண்டி இருக்கின்றது.இந்நிலையில்,சுவிஸ் நாட்டை சேர்ந்த ஏபிபி என்ற பொறியியல் நிறுவனம் தனது புதிய டெர்ரா சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் அதிவேக மின்சார வாகன சார்ஜிங் அலகு என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.இந்த புதிய டெர்ரா 360 மாடல் […]
வாகனங்களில் ஹாரன் ஒலி எழுப்பினால் அதில் இந்திய இசை வருவதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடக்க விழாவில் முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.அப்போது,அமைச்சர் கட்காரி நாசிக்கில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து,பேசிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: “இந்தியாவில் […]
இந்தியாவில் இன்று முதல் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்திய சந்தையில் இருந்து டொயோட்டா யாரிஸை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.யாரிஸ் தயாரிப்பு நிறுத்தப்படுவது பற்றிய செய்திகள் நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தன.அந்த வகையில், இன்று முதல் இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்பட்டதாக,டோயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக,நடுத்தர அளவிலான செடான் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ […]
இந்தியாவில் கார்கள் தயாரிப்பதை நிறுத்த நிறுவனம் முடிவு செய்ததை அடுத்து ஃபோர்டு இந்தியா தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா பதவி விலகினார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்னையிலும், குஜராத்திலும் என இரு மிகப்பெரிய ஆலைகள் உள்ளன.இந்த நிலையில்,தொடர்ந்து விற்பனையில் பெரும் சரிவினைக் கண்டு வருவதால் இந்தியாவில் அதன் உற்பத்தியினை நிறுத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனம் அறிவித்தது. இதனால்,ஆலையில் பணிபுரியும், பல ஆயிரம் பேர் இதனால் தங்களது வேலையினை […]
2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை இந்தியா நிறுத்த வேண்டும் என்று ஹீரோ எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்கள் போன்ற சுத்தமான ஆற்றல் வாகனங்களை மாற்றுவதை அதிகப்படுத்த 2027 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை நாடு முழுவதும் நிறுத்த வேண்டும் என்று மின்சார-ஸ்கூட்டர் தயாரிப்பாளர் ஹீரோ எலக்ட்ரிக் அழைப்பு விடுத்துள்ளது. மாற்று எரிசக்தி வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் சீனா போன்ற பிற நாடுகளை விட இந்தியா […]
டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகன வரம்பின் விலையை அக்டோபர் 1 முதல் 2% அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ்,அதன் வர்த்தக வாகன வரம்பின் விலையை அக்டோபர் 1, 2021 முதல் 2% அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி,இந்த 2 சதவீத வரம்பில் பயனுள்ள விலை உயர்வு, மாடல் மற்றும் வாகனத்தின் மாறுபாட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் கூறுகையில்:”எஃகு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற பொருட்களின் […]