மாருதி நிறுவனம் தயாரித்த கார்களில் சில சிக்கல் இருப்பதாகவும் இதனால் 9,125 கார்களை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 9,125 வாகனங்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. இதில் சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய மாடல் கார்களில் சிக்கல் இருப்பதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட கார்களில் முன் வரிசை இருக்கை சீட்பெல்ட்களின் தோள்பட்டை உயரத்தை சரிசெய்யும் […]
மூன்று நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட மின்சார வாகனங்களுக்கு ஏற்ற பேட்டரியை ஹார்வர்டு ஆதரவு ஸ்டார்ட்அப் உருவாக்கியுள்ளது மற்றும் இது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம்-உலோக தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பேட்டரி வாழ்நாளில் 10,000 சுழற்சிகளுக்கு மேல் சார்ஜ் செய்ய முடியும். தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் பேட்டரியை வணிகமயமாக்குவதற்கும் ஆடன் எனர்ஜி $5.15 மில்லியன் நிதியைப் பெற்றுள்ளது.
இந்த செப்டம்பரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஐ வாங்க திட்டமிட்டால், இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மூன்று வகைகளில் கிடைக்கிறது. இதில் 349சிசி, ஜே-சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வழங்கும் ஹண்டர் 350 மிகவும் மலிவு விலை மாடலாகும், இதன் ஆரம்ப விலை ரூ. 1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஜே-சீரிஸ் தளத்தை அடிப்படையாகக் […]
ஹோண்டா இந்தியாவில் சிபி300எஃப் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை (டெல்லி எக்ஸ்ஷோரூம்) ரூ.2.26 லட்சத்தில் தொடங்குகிறது. டீலக்ஸ் ப்ரோ மாறுபாடு முழு எல்இடி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-சேனல் ஏபிஎஸ், ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (எச்எஸ்டிசி) ஆகியவற்றை உள்ளடக்கிய முழு அம்சங்களுடன் வரும். ஹோண்டா சிபி300எஃப் மூன்று வண்ணங்களில் பல்வேறு வகைகளில் விற்கப்படும்; மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட். Cசிபி300எஃப் […]
மஹிந்திரா ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ் புது மாடல்களின் விலையை வெளியிட்டது. SUVயின் லேட்டஸ்ட் வெர்ஸனை ஜூன் 27 அன்று Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L ஆகிய ஐந்து வகைகளில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நேற்று(ஜூலை 21) மஹிந்திரா&மஹிந்திரா தனது புதிய ஸ்கார்பியோ-என் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ்(4WD) வகைகளுக்கான அறிமுக விலைகளை அறிவித்தது. Scorpio-N இன் பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், மடிக்கக்கூடிய ஸ்டீயரிங் நெடுவரிசை மற்றும் டிரைவர் தூக்கத்தைக் கண்டறியும் அமைப்பு […]
இளைஞர்களின் ஆல்டைம் பேவரைட் RX100 மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்கும் என யமஹா சேர்மன் கூறியுள்ளார். 1985 ஆம் ஆண்டு யமஹா நிறுவனம் தனது RX100 ரக ஜாம்பவானை இந்திய சந்தையில் களமிறக்கியது. அதன் வேகத்துக்கு தற்போதுள்ள சூப்பர் பைக்குகளே திணறும். அப்படி இருக்கையில் அந்த காலத்தில் சொல்லவா வேண்டும். இதனை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏராளம். இளைஞர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தாலும், தனது RX100 பைக் உற்பத்தியை 1996ஆம் ஆண்டே நிறுத்தி […]
சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை நாம் செய்திகளில் படித்து வருகிறோம். மேலும்,எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்கத் தவறினால்,சம்மந்தப்பட நிறுவனங்களுக்கு “கடுமையான அபராதம்” விதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட் S1 ப்ரோ எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.மேலும், புனேவில் மார்ச் 26 அன்று நடந்த ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர […]