இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா தனது அட்டகாசமான ரோக்ஸ்சர் (Roxor)-னை தற்போது அமெரிக்காவில் களமிறக்கியுள்ளது! வாகன ஓட்டிகளின் கவணத்தை ஈர்த்துள்ள இந்த வாகனம், பார்பதற்கு மட்டுமல்ல செயல்திறனும், அட்டகாசமாக தான் உள்ளது. ஜீப் (Jeep) போன்ற வடிவத்தில் கச்சிதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. எஃகு சட்டகம், திட அச்சுகள், இலை நீரூற்றுகள் ஐந்து வேக கைமுறை பரிமாற்றம், இரண்டு வேக பரிமாற்ற வழக்கு மற்றும் 45 mph ஒரு உயர் வேகம் போன்ற பல சிறப்பம்சங்களுடன் […]
உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதிக புகையை வெளிவிடும் வாகனங்களை பறிமுதல் செய்ய பறக்கும்படைகளை அமைக்கக்கோரிய வழக்கில் போக்குவரத்து துறைக்கான கூடுதல் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. வாகனங்களை திரவ எரிபொருளிலிருந்து, வாயு எரிபொருளுக்கு மாற்றி புகையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், உச்சநீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இந்தியாவில் 25 லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், வாகனப் புகை வெளியேறுவது தொடர்ந்தால், தமிழகம் சுடுகாடாக மாறும்நிலை உருவாகும் என்றும் கூறப்பட்டிருந்தது. மனுவை […]
இப்போது பயன்படுத்தி வரும் 182 விமானங்களை ஏர் ஏசியா நிறுவனம் 120 கோடி டாலருக்கு விற்பனை செய்ய உடன்பாட்டை எட்டியுள்ளது. ஆசியாவில் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஏசியா தனது கடன் சுமையைக் குறைப்பதற்காக இப்போது பயன்பாட்டில் உள்ள 182 ஏர்பஸ் விமானங்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிபிஏஎம்(bbam) நிறுவனத்துடன் பேச்சு நடத்தி 120 கோடி டாலருக்கு விற்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏர் ஏசியாவின் துணை நிறுவனங்கள் மூலம் 98 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. […]
மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ இந்தியாவின் கனவு காராக விளங்கி வரும் நிலையில் , விற்பனையில் 35 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் புதிய புதிய கார் நிறுவனங்கள் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. எனினும் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார் விற்பனை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்டோவிற்கு தொடர்ந்து வரவேற்பு உள்ளது. இந்திய நடுத்தரக் குடும்பத்தின் விருப்பமிக்க காராக இது விளங்குகிறது. குறைவான […]
கார் ரகங்களான டியாகோ ஈவி (Tiago EV) மற்றும் டிகோர் ஈவி (Tigor EV) உள்ளிட்ட மின்சாரத்தால் இயங்கும் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2018-ல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2 எலக்ட்ரிக் கார்களும் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்த பேட்டியளித்த அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும், மேலாண் இயக்குநருமான குவென்டர் பட்ஸ்செக், ஒரு சில மாதங்களில் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் சந்தைக்கு வரும் என தெரிவித்தார். 80 சதவீத […]
கார் நிறுவனங்களான போர்ஸெ (Porsche) மற்றும் ஆடி(AUDI) இணைந்து மின்சாரத்தால் இயங்கும் கார் தயாரிப்புக்கான உற்பத்தித் தளத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட்டில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் போர்ஸெ மிசன் ஈ கான்செப்ட் கார் (Porsche Mission E concept car) அறிமுகப்படுத்தப்பட்டது. சொகுசு கார் ரகங்களான போர்ஸெ மற்றும் ஆடி கார் நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் இணைந்து பேட்டியளித்தனர். மின்சாரத்தால் இயங்கும் கார்களை உற்பத்தி செய்ய 850 பேரை பணிக்கு எடுக்க இருப்பதாகவும், […]
தலாய்லாமா படத்தைச் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தியதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் சீனாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில், தலாய் லாமாவின் வாழ்க்கையில் இருந்து உந்துதலைப் பெற்று உங்கள் வாரத்தைத் தொடங்குங்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. இப்படிக் குறிப்பிட்டதால் சீனாவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களின் கண்டனத்துக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஆளானது. இதையடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பதிவை மெர்சிடிஸ் பென்ஸ் அகற்றியது மட்டுமல்லாமல் சீனாவில் புகழ்பெற்ற வெய்போ என்கிற சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. அதற்குப் […]
வரும் 10-ஆம் தேதி வரை பணிக்கு செல்லும் பெண்கள் இருசக்கரம் வாங்குவதற்கான மானியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி பணிக்கு செல்லும் பெண்களுக்கு முதற்கட்ட இருசக்கர மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருசக்கர வாகன மானியத்துக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் நேற்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்கும் போது பிறப்பு, இருப்பிடம், சாதி மற்றும் வருமானச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர […]
தற்போது பேட்டரி மோட்டார் சைக்கிள் உருவாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறது, அமெரிக்காவின் குரூயிஸ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன். ஆட்டோமொபைல் உலகமே பேட்டரி வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனித்து இருக்க கூடாது என்பதில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் கவனமாக உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ. தூரம் ஓடும் வகையில் இது தயாரிக்கப்பட்டு வருகிறது. பேட்டரி வாகனங்கள் என்றாலே […]
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் மாருதியின் புகழ்பெற்ற காரான ஸ்விப்ட் விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் காராக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. மாருதி ஸ்விப்ஃட் கார் இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இதன் மேம்பட்ட 3ம் தலைமுறை இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. புதிய 2018 ஸ்விஃப்ட், காரானது தற்போதுள்ள மாடலை விட ரூ.60,000 கூடுதல் விலை […]
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் டீசல் கார்களில் வரும் புகை மிகவும் நச்சுதன்மையாக இருப்பதால் தனது வாகனங்களை திரும்பப்பெற்றுள்ள நிலையில் தற்போது உள்ள நிலையில் மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், டீசல் கார்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய கடந்த 2015 ஆம் ஆண்டு போக்ஸ்வேகன் ஆய்வு நடத்தியதாக கூறியுள்ளது. ஆய்வில், குரங்குகளை தனித்தனியாக கண்ணாடி பெட்டிகளில் அடைத்து நச்சுப்புகையை உட்செலுத்தி அபாயகரமான சோதனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. மனிதர்கள் மீதும் இதுபோன்ற […]
நிசான் நிறுவனம் இந்தியாவில் நிரந்தர இடத்தை பிடிக்க ஒரு முயற்சியாக மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது . ஏற்கனவே லீஃப் என்ற மின்சாரக் காரை தயாரித்திருந்த நிஸ்ஸான் நிறுவனம், அதை இந்தியாவில் விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தது. இந்த நிலையில், 7 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பாகும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அந்த நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிஸ்ஸான் நிறுவன அதிகாரிகள் […]
இந்தியாவை பொறுத்தவரை வாகன விற்பனையில் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் இடையே விற்பனையின் அளவு அதிகாமாக தான் விற்பனையாகும் ஆனால் இதற்கு மாறாக கடந்த டிசம்பரில் 2,39,712 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய 2016 டிசம்பரில் 2,27,823 வாகனங்கள் விற்பனையான நிலையில், 5.22 சதவீத அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. கார்களின் விற்பனையை பொறுத்தவரை 2016ம் ஆண்டு டிசம்பரை ஒப்பிட்டால் கடந்த டிசம்பரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 2016 டிசம்பரில் 1,58,617 கார்கள் விற்பனையான நிலையில் கடந்த டிசம்பரில் […]
இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை டிசம்பரில் 43 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால் தெரிவித்ததாவது: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை மேலும் வலுப்படுத்திய ஆண்டாக அது அமைந்தது. சவாலான சூழ்நிலைகளுக்கிடையிலும் சென்ற டிசம்பரில் 4,72,731 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டு விற்பனையான 3,30,202 […]
உலகில்ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் புதிய ரோபோ ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினாா்.ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் இதனை தயார்செய்துள்ளது. பேபட்டா வொ்ஷனில் இந்த ரோபோ மனித உருவில்உருவக்கப்பட்டுள்ளது.காவல் பணியை செய்யவும்,மனிதர்களை அடையாளம் காணவும்,புகார்களை பெறவும் இந்த ரோபோவால் முடியும். ரோபோவின் விலை 5 லட்சம் ரூபாய் என்றும், இந்த ரோபால் 360 டிகிாி கோணங்களிலும் திரும்பி […]
200சிசி பைக் மாடலில் புதிதாக களமிறக்க புதிய மாடலை ஹீரோ நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200சிசி மோட்டிவ். இவை 2016ஆம் ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கில் 18.6PS ஆற்றலை 8500 rpm மற்றும் 17.2 Nm டார்க்கினை 6000 rpm சுற்றில் வழங்கும் புதிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 200cc 4 ஸ்டோர்க் என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மல்டி […]
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும், மாசு கட்டுப்பாடு காரணமாகவும் மின்சார வாகனங்களின் மீது அரசும், வாகன ஓட்டிகளும் மோகம் கொண்டுள்ளனர். அதனால் பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன. இதில் யமகா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர மோட்டார் வாகனத்தை வெளியிட ஆராய்ந்து வருகிறது. தனியார் இதழுக்கு யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நாங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனனங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், […]
இந்தியாவின் 3வது பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மகிந்திரா & மகிந்திரா நிறுவனம், உயர்ந்து வரும் உள்ளீட்டு செலவுகளின் காரணமாக தனது ஒட்டுமொத்த வாகன மாடல்களின் விலையில் 3% உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பயணியர் வாகனங்களில் முன்னணியில் இருக்கும் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500 முதல் கமெர்சியல் வாகனங்களான பிக்-அப் டிரக்குகள், பஸ்கள், லாரிகள், டிராக்டர்கள் வரையில் அந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் வரும் ஜனவரி முதல் 3% வரை விலை […]
பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யு ஜி310 ஆர் என்ற பைக் மாடலை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பல மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த பைக் சர்வீஸ் மற்றும் விற்பனை துறையில் நிலவி வந்த சில தடங்கல்கள் காரணமாக ஜி310 ஆர் பைக்கின் இந்திய வருகை தாமதமாகிக்கொண்டே வந்தது.கடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக பி.எம்.டபிள்யு ஜி 310 இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இவ்வகை பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் என அப்போதே […]
டி.வி.ஸ் இன் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அப்பாச்சிஆர் ஆர் 310 டெல்லி-இல் விற்பனைக்கு வந்தது . இதன் என்ஜின் ஆனது பிஎம்டபுள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் இந்த பைக்கை உருவாக்கியுள்ளது. ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக், 2.63 நொடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும். அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. முன்பகுதி சக்கரத்தில் கயபா 300மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 200மிமீ பிரேக்கும் உள்ளது.இந்த பைக்-இன் மூலம் […]