மைக்ரோசாப்ட் (MICROSOFT)நிறுவனத்துடன் ஓலா(OLA) கூட்டணி.!ஆட்டோமொபைல் புரட்சியா.?
மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி.. புதிய திட்டத்தில் ஓலா..!
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஓலா(OLA), மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன்(MICROSOFT) இணைந்து கார் தயாரிப்பு நிறுவனங்களுக்காகப் புதிய கார் இணைப்புத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
டாக்ஸி சேவை மட்டுமே வழங்கி வந்த ஓலா நிறுவனம் இந்தக் கூட்டணி மூலம் ஆட்டோமொபைல் சேவையை அளிக்க முதல் அடியை வைத்துள்ளது.
இக்கூட்டணியில் ஓலா உருவாக்க உள்ள புதிய சேவைக்கான கிளவுட் சேவையை மைக்ரோசாப்ட் அளிக்க உள்ளது. இதன் மூலம் தற்போது ஓலா வைத்திருக்கும் ஓலா பிளே தளத்தை மைக்ரோசாப்ட் அசூர் உடன் இணைக்க இரு நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளது.
இச்சேவையின் மூலம் கார் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்குச் சிறந்த அனுபவம், பழுதுபார்த்தல், மேம்பட்ட வழிகாட்டி, சரியான நேரத்தில் மெயின்டனென்ஸ், காரின் சக்தியை மேம்படுத்தல்,உற்பத்தியை மேம்படுத்துதல் போன்ற பலவற்றை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என ஓலா தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் போன் உலகளாவிய நிறுவனத்துடன் கூட்டணி வைத்ததன் மூலம் ஓலா தனது சேவையை உலக நாடுகளில் இருக்கும் அனைத்துக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் தனது சேவை மற்றும் தயாரிப்பை கொண்டு செல்ல முடியும்.
இந்த இணைப்பின் மூலம் ஓலா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தும். மேலும் ஓலா ப்ளே பயன்படுத்தும் இணைத்து வாடிக்கையாளர்களும் ஆபிஸ் 365 மற்றும் ஸ்கைப் போன்ற மைக்ரோசாப்ட் நிறுவன சேவையைப் பயன்படுத்தலாம்.
இப்புதிய கூட்டணி குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன சீஇஓ சத்ய நாடெல்லா கூறுகையில், தற்போது கார் முழுவதும் தொழில்நுட்பமயாகியுள்ளது. ஓலா உடனான கூட்டணி மூலம் கார் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கும் மேம்பட்ட சேவையை அளிக்க முடியும் என்று கூறினார்.
உலகளவில் ஆட்டோமொபைல் சந்தை தற்போது மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது, பெட்ரோல் கொண்டு இயங்கும் காரில் இருந்து தொழில்நுட்பத்தால் இயங்கும் கார்கள் உருவாகி வருகிறது. இந்த மாற்றத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஓலா பிளே முக்கியப் பங்கு வகிக்கும் என நம்புகிறேன் என ஓலா நிறுவன தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.
Ola (OLA) Alliance with Microsoft (MICROSOFT).! Automobile Revolution.