ஓலா நிறுவனம் மோட்டார் பைக் மற்றும் எலக்ட்ரிக் காரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான ஓலா (OLA) 2021ம் ஆண்டின் பிற்பகுதியில் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கியது. அதன் அறிமுகத்திலிருந்தே நிறுவனம் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார்
அவர் அளித்த பேட்டியில், ஓலா பொது பயன்பாட்டிற்கு வருவதற்கு நான்கு முதல் ஆறு வருடங்கள் ஆகும் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்பொழுது அதன் முன்னேற்றத்தை என்னால் உணர முடிகிறது. ஓலா எலக்ட்ரிக் நான் ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட வேகமாக வளர்ந்துள்ளது. ஏனென்றால் இந்த ஸ்கூட்டர்களுக்கு சந்தைகளில் வரவேற்பு மிகவும் வலுவாக உள்ளது என்று கூறினார்.
மேலும், தனது வணிகத்தை விரிவுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருப்பதாக கூறிய அகர்வால் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு மோட்டார் பைக் மற்றும் 2024ம் ஆண்டு பேட்டரியில் இயங்கும் காரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்வது குறித்தும் அவர் பரிசீலித்து வருகிறார்.
எலக்ட்ரிக் வாகன பிரிவில் புதிதாக நுழைந்த ஓலா எலக்ட்ரிக்ஸ் இப்போது சந்தையில் 38% பங்குகளை வைத்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தரவுகளின்படி, டிசம்பர் 2021 முதல் 2,39,000க்கும் அதிகமான மின்சார ஸ்கூட்டர்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…