‘இனிமே இது தான்’…சிறுத்தையை தூக்கியெறிந்து லோகோவை மாற்றிய ஜாகுவார்!
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் அதன் பல வருட பழமையான லோகோவை மாற்றியுள்ளது.
டெல்லி : பல ஆண்டுகளாக, ஜாகுவார் நிறுவனம் பல்வேறு வகையான வாகனங்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு முதல் முழு மின்சார கார் தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்த தயாராகி வருகிறது.
ஆம், ஜாகுவார் நிறுவனம் 2026 முதல் EV பிராண்டாக மட்டுமே மாற போவதாக கூறப்படுகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டில் மூன்று புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாம். இந்நிலையில், அந்நிறுவனம் தனது பல வருட பழமையான லோகோவை மாற்றி, புதிய பிராண்ட் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளது, அதனுடன் புதிய லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Copy nothing. #Jaguar pic.twitter.com/BfVhc3l09B
— Jaguar (@Jaguar) November 19, 2024
கடந்த இருபது ஆண்டுகளாக ஜாகுவார் கார்களின் கிரில்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ஜாகுவார் ‘முக லோகோ’, புதிய வட்ட வடிவ பேட்ஜால் மாற்றப்பட்டுள்ளது. பேட்ஜில் ‘J’ மற்றும் ‘r’ எழுத்துக்களை பித்தளை வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய லோகோ நெட்டிசன்களிடம் விவாதத்தை கிளப்பியுள்ளது. சிலர் இதை வரவேற்றாலும், பாரம்பரிய பிராண்டை இழந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.
ஜாகுவார் லோகோ
ஜாகுவார் வெளியிட்ட புதிய லோகோவில் “JaGUar” என்ற எழுத்துகளுடன் சிறிய மற்றும் பெரிய எழுத்துகளை இணைத்துத் தோற்றமளிக்கிறது. அதில், J எழுத்து பெரியதாகவும் a எழுத்து சிரியதாகவும், G பெரியதாகவும், U பெரியதாகவும், இறுதியில் ar ஆகிய இரண்டு எழுத்துக்களும் சிறியதாக லோகோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் J மற்றும் r இன் தோற்றத்தைக் கொடுக்கும், ஒன்றோடொன்று 180 டிகிரி கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம்.
That’s not even the worst of it
They’re replacing the growler with…a monogram https://t.co/DhW94r0uhM pic.twitter.com/LCPJuKtM2r
— Morning Brew ☕️ (@MorningBrew) November 20, 2024
ஜாகுவார் இவி
ஜாகுவார் நிறுவனம் அதன் புதிய லோகோ கார்களில் எவ்வாறு தோன்றும் என்பதை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், டிசம்பர் 2 ஆம் தேதி அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறும் ஆர்ட் வீக்கில் ஆட்டோமேக்கர் “டிசைன் விஷன்” கான்செப்ட்-ல் புதியஸ் காரைக் காண்பிக்கும் போது கூடுதல் விவரங்கள்வெளி வரும் என்றும், இந்த கான்செப்ட்டின் போது, ஜாகுவாரின் முதல் மின்சார காரைப் பற்றிய முதல் பார்வையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.